[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 03:07.04 PM GMT ]
நாளை 11 ம் திகதி தொடக்கம் 18ம் திகதிவரை யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெறவிருப்பதால் கொழும்பு காலி முகத்திடல் சுற்று வட்டம் தொடக்கம் ஜனாதிபதி செயலகம் வரையான வீதி நாளை காலை 7 மணி முதல் குறித்த வெற்றி நிகழ்வு நிறைவடையும் வரை மூடப்படவுள்ளது.
மக்களின் அழுத்தம் காரணமாக அசாத் சாலியை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது!– எதிர்க்கட்சித் தலைவர்
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 02:35.34 PM GMT ]
மக்களின் அழுத்தம் காரணமாக அசாத் சாலியை அரசாங்கம் விடுதலை செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று வரையில் பயங்கரவாதியாகக் கருதப்பட்ட அசாத் சாலி, மக்கள் அழுத்தம் காரணமாக இன்று விடுதலை செய்யப்பட்டார்.
அரசியல்வாதிகளை கட்டுப்படுத்த அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்துகின்றது.
எதிர்க்கட்சியின் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க முடியும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவினரால் விடுவிக்கப்பட்ட அசாத் சாலி தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அசாத் சாலியை பார்வையிடச் சென்ற போது அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்
அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டார்!
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 09:29.53 AM GMT ]
கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி விடுதலை செய்யப்டப்பட்டுள்ளார்.
புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த அசாத் சாலி, ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அசாத் சாலியின் தடுப்புக்காவல் உத்தரவினை ரத்து செய்யுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அசாத் சாலி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
குற்றத்தை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்து அசாத் சாலி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின் இன்று விடுதலை செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தற்போது கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அவரை அவரது குடும்பத்தினர் மற்றும் மனோ கணேசன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளனர்.
2ம் இணைப்பு
அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கு திகதி குறித்த நிலையில் அசாத் சாலி விடுதலை!
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அசாத் சாலி சார்பில், சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அடிப்படை மனித உரிமை மீறல் மனு ஆட்கொணர்வு மனு ஆகிய இரு மனுக்களை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.
இவ் இரு மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில், அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஒரு கிழமை மேலதிகமாக அனுமதி கோரப்பட்டு எதிர்வரும் 28ம் திகதிக்கு இவ் வழக்கு விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 7-2 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்க முடியும். அதனை நீடிப்பதானால் ஜனாதிபதியின் உத்தரவுடன் 90 நாட்கள் தொடர்ச்சியாக தடுப்புக்காவலில் வைக்க முடியும்.
இவ்வாறாக மூன்று மாத காலம் தடுத்து வைத்து விசாரணை செய்வது என அறிவித்திருந்த நிலையில், ஜனாதிபதி தடுப்புக்காவல் உத்தரவை மீளப் பெற்றதையடுத்து குற்றப்புலனாய்வு பிரிவினர் உயர் நீதிமன்றம் அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கு திகதி குறித்திருந்த நிலையில், இன்று அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டு நவலோக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மனுதாரர் சார்பில் சிரேஸ்ர சட்டத்தரணிகளான சி.ஜே.வெலியமுன , எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சிரேஸ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் அனுசரணையுடன் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
இவ் மனுத்தாக்கலை, கைதும் தடுத்து வைத்தலும் சட்டரீதியற்றது என்றதன் அடிப்படையில் சிரேஸ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவினால் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அசாத் சாலி விடுதலையை உறுதிப்படுத்தினார் சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா.
Geen opmerkingen:
Een reactie posten