அம்ஸ்ரர்டாம் நகரை சேர்ந்த சூரி. உத்ரெக்த் நகரை சேர்நத விமல் ஆகிய இருவர்களால் 15-05-2013 ஆரம்பிக்கப்பட்ட நடை பயணம் மூன்றாம் நாளான இன்று(16-05-2013) மதியம் 12 மணிக்கு மீணடும் மைதிறைக் நகரிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.
தாயகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன ஒடுக்குமுறைக்கெதிராகவும் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும் . நெதர்லாந்து நாட்டு மக்களுக்கும்இ நெதர்லாந்து ஊடகங்களுக்கும் ஈழத்தமிழருக்கான ஆதரவை வேண்டி இந்த இரு உணர்வாளர்களும் காலநிலை சீரற்ற நிலையிலும் தமது நடை பயணத்தை மிகவும் மன உறுதியோடு தொடர்ந்த வண்ம் உள்ளனர்.
இவ் நடைபயணம் 18-05-2013 (சனிக்கிழமை) மதியம் 1 மணிக்கு நடைபெறும் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 4ம் ஆண்டின் நினைவு வணக்கநிகழ்வு நடைபெறும் இடமான டென் காக் பாராளுமன்றம் முன்பாக நிறைவடையும். இன் நிகழ்வில்அதிகமான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படகின்றன.
Geen opmerkingen:
Een reactie posten