[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 04:40.43 PM GMT ]
நேற்றிரவு சவூதி அரேபிய தொழில் அமைச்சின் வெளிநாட்டு அதிகாரியொருவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வரும் மே 18ம் திகதியை இலங்கை அரசு போர் வெற்றி தினமாக இம்முறையும் கொண்டாடவுள்ளது. இன் நிகழ்ச்சியில் மகிந்த உட்பட பல முக்கிய புள்ளிகள் கலந்து கொள்கிறார்கள். இதனையடுத்து கொழும்பு காலிப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெயர்ந்து அல்லது சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டவர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்திற்கு முன்னர் நாட்டில் இருந்து வெளியேறுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையர்களுக்கும் தங்களது தொழில் தருணரின் தலையீடுகள் எதுவுமின்றி சவூதி அரேபியாவில் இருந்து வெளியேறுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக தூதரகத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்குத் திரும்புவதற்கான விமானப் பயணச் சீட்டுக்களை தூதரகத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், அருகிலுள்ள தூதரகம் அல்லது கொன்சூலர் அலுவலகத்தின் ஊடாக தற்காலிக அனுமதி அட்டையைப் பெற்றுக்கொண்ட பின்னர் தாய்நாட்டிற்கு திரும்ப முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கால அவகாசம் ஜூலை மாதம் முதல் வாரம் வரை மட்டுமே காணப்படுவதாகவும், அதன் பின்னர் சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டவர்களும் தண்டனை விதிக்க சவுதி அரேபிய அரசு தீர்மானித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஸ உகண்டா ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடல்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 06:10.34 PM GMT ]
உகண்டாவிற்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஐயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அந்நாட்டு ஜனாதிபதி யொவேரியை அவரது உத்தியோகபூர்வ வாசல்தலத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பின் போது, உகண்டாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவுவது தொடர்பாகவும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் குறிப்பிட்டார்.
அத்துடன், இறப்பர் மற்றும் எரிசக்தித் துறைகளில் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட உகண்டா ஜனாதிபதி, இதன்போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான உடன்படிக்கைகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஐ.நா சபையின் மனித உரிமைகள் பேரவையில் மூன்று தடவைகளும் இலங்கை ஆதரவு வழங்கியமைக்கு ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதாவும் ஜனாதிபதி ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.
மே 18 குண்டு வெடிக்க கூடாது: மோப்ப நாய்களுடன் இராணுவம்! வெற்றிவிழா அணிவகுப்பில் 11 ஆயிரம் படையினர்
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 12:56.53 AM GMT ]
பல லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட இன் நாளை இலங்கை அரசு பெரும் போர் வெற்றி நாளாகக் கொண்டாடுவதை இதுவரை நிறுத்தவில்லை.
இதேவேளை இன் நிகழ்ச்சியில் மகிந்தர் உட்பட பல முக்கிய புள்ளிகள் இதில் கலந்துகொள்கிறார்கள். இதனையடுத்து கொழும்பு காலிப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வெடிபொருட்களை மோப்பம் பிடிக்கக் கூடிய நாய்கள் தற்போது வரவழைக்கப்பட்டுள்ளது. இது போதாது என்று குண்டுகளை செயலிழக்கச் செய்யும் படைப் பிரிவினரும் அப் பகுதியில் தொடர்ந்து கடமையில் ஈடுபட்டுள்ளது
2010ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி முதல் இலங்கை அரசு இன் நாளை போர் வெற்றி நாளாக கொண்டாடி வருகிறது. ஆனால் முன் எப்பொழும் இல்லாத அளவு இம் முறை பாதுகாப்புகள் பன்முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது எதற்காக என்று தான் புரியவில்லை என சில அதிகாரிகள் ஆச்சரியமடைந்துள்ளார்கள் என அறியப்படுகிறது.
போர் வெற்றி நாள் நடைபெறுவதும் போது, அயல் அட்டையில் உள்ள கடைகளையும் இருப்பிடங்களையும் , பாதுகாப்பு என்ற போர்வையில் இராணுவம் துளைத்து எடுப்பதா பலர் விசனம் தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை மே 18 ஓர் இன அழிப்பு நாள் என்று புலம்பெயர் தமிழர்கள் பிரகடனப்படுத்தியுள்ளார்கள். அன்றைய தினம் பெருந்தொகையான தமிழ் மக்கள் கூடி தமது துக்கத்தை வெளியிடுவார்கள்.
கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
போர் வெற்றிவிழா அணிவகுப்பில் 11 ஆயிரம் படையினர்
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைக் கொண்டாடும் வெற்றிவிழா அணிவகுப்பில் 11ஆயிரம் இலங்கைப் படையினர் பங்கேற்கவுள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் வரும் 18ம் நாள் காலி முகத்திடலில் நடக்கவுள்ள விழாவில் இலங்கை படைபலத்தை வெளிப்படுத்தும் வகையிலான பாரிய இராணுவ அணிவகுப்பு இடம்பெறவுள்ளது.
இதில் 6.350 இலங்கை இராணுவத்தினர், 1,300 இலங்கை கடற்படையினர், 1,300 இலங்கை விமானப்படையினர், 1400 இலங்கை காவல்துறையினர், 676 சிவில் பாதுகாப்புப் படையினர் என மொத்தம் 11 ஆயிரம் இலங்கைப் படையினர் பங்கேற்கவுள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் போரக்கல் அணிவகுப்பில் ஆட்டிலறிகள், பல்குழல் ரொக்கட் செலுத்திகள், பொறியியல் வாகனங்கள், டாங்கிகள் உள்ளிட்ட 100 கவச வாகனங்கள் இடம்பெறவுள்ளன.
இலங்கை கடற்படையின் சார்பில் பீரங்கிப் படகுகள், அதிவேக தாக்குதல் படகுகள். சிறிய ஆரோ வகைப் படகுகள் உள்ளிட்ட 50 போர்க்கலங்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளன.
மேலும் இலங்கை விமானப்படையில் உள்ள போர் விமானங்கள், உலங்குவானூர்திகள் உள்ளிட்ட 30 வான்கலங்களும் இதில் பங்கேற்கவுள்ளன.
இந்த அணிவகுப்புக்கான ஒத்திகைகள் தற்போது காலிமுகத்திடலில் இடம்பெற்று வருகிறது.
2009ம் ஆண்டு தொடக்கம் இலங்கை அரசாங்கம் இந்தப் போர் வெற்றிவிழாவை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten