தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 mei 2013

தந்தை செல்வா உண்மையில ஒரு தீர்க்கதரிசி - கே. வி தவராசா!!


வட இலங்கையில் இராணுவத்தினரின் ஆதிக்கம் அதிகம். 5000 வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 09:33.02 PM GMT ]
வட இலங்கையின் வலிகாமம் பகுதியில் பொது மக்களின் நிலங்களை இராணுவம் கையப்படுத்த எடுத்து வரும் முயற்சிகளுக்கு எதிராக பாதிகப்பட்டுள்ளவர்களின் சார்பில் ஐயாயிரம் வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரின் நடவடிக்கை தொடர்பில், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தனித்தனியாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்ததற்கு மாறாக இராணுவம் வலிகாமம் பகுதியில் ஆறாயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது நீதிமன்ற அவமதிப்புச் செயல் என்றும் தெரிவித்துள்ள கூட்டமைப்பினர், அது தொடர்பிலும் தனியாக ஒரு வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் கூறியுள்ளனர்.
பொதுமக்களின் சார்பில் வலிகாமம் பகுதியில் காணிகளைக் கையகப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மாவை சேனாதிராஜா தாக்கல் செய்த வழக்கில் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களை அங்கேயே குடியேற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்ககெனவெ உத்தாவிட்டிருந்தது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
குறிப்பிட்ட பகுதிகளில் பொது மக்களின் காணிகளை கையகப்படுத்த இராணுவம் அறிவித்தல்களை ஒட்டியதை அடுத்து பொதுமக்கள் இதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்காக வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த காணி உரிமையாளர்களின் காணி உரிமைப் பத்திரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பரிசீலனை செய்து விபரங்களைத் திரட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறினார்.
இதற்கிடையில் வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் வீரபுரம் பகுதியில் தமிழ்க் குடும்பங்களுக்கு 18 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த 400 ஏக்கர் விவசாய காணிகளில் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியிருக்கின்றார்.

தந்தை செல்வா உண்மையில ஒரு தீர்க்கதரிசி - கே. வி தவராசா
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 07:05.41 PM GMT ]
இலங்கைத் தமிழரின் அரசியல் வாழ்வில் 1947ஆம் ஆண்டிலிருந்து 1977ஆம் ஆண்டு சுமார் வரை 30 ஆண்டுகாலமாக தமிழ் மக்களின் அகிம்சை வழி உரிமைப் போராட்டத்தின’மூலம் தமிழ் பேசும் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசையை அடைவதற்காh தலைமை தாங்கிய தந்தை செல்வா மறைந்து 36 ஆண்டுகள் கடந்த நிலையில்
தந்தை செல்வாவின் நினைவுப் பேருரையை வருடாந்தம் நடாத்திவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தந்தை செல்வாவின். இந்த நினைவுப் பேருரையில் வரவேற்புரை ; நிகழ்த்துவதில் மட்டற்ற மகிழ்சியடைகின்றேன்
தந்தை செல்வாவின் நினைவுப் பேருரையை தலைமை தாங்கி நடாத்த வருகை தந்துள்ளதமிழரசுக்கட்சியினதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் தலைவரான மதிப்புக்கும் கண்ணியத்திற்கும் உரிய சம்பந்தன் ஜயா அவர்களே
நினைவுப் பேருரையாற்ற வருகை தந்திருக்கும் மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய நீதியரசர் சி;.வி விக்கினேஸ்வரன் அவர்களே
தமிழரசுக் கட்சியின் கௌரவ பொதுச் செயளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்களே;
வெளிநாட்டுத் ராஜதந்திர பிரமுகர்களே கௌரவ அமைச்சர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களே அரசியல் பிரமுகர்களே பத்திரிகைத் துறையினரே சகோதர சகோதரிகளே உங்கள் அனைவரையும் தமிழரசுக் கட்சி கொழும்பு மாவட்ட கிளையின் சார்பில் வருக வருக என இருகரம் கூப்பி வரவேற்கின்றோம்; 
எங்கள் வேண்டுகோளையேற்று நினைவுப் பேருரை நிகழ்த்த வந்திருக்கும் மதிப்பிற்குறிய நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் உயர்கொள்கைப்பற்று அறிவு மற்றும் தைரியம் என்பவற்றுக்காக உயர்மதிப்பைச் சம்பாதித்துள்ளவர்
நான் 1977ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவன்;;- கௌரவ விக்னேஸ்வரன் சட்டக்கல்லூரி; விரிவுரையாளராவார்; பல சட்டத்தரணிகளையும் நீதிபதிகளையும் உருவாக்கியவர் ;நீதியரசர் விக்னேஸ்வரன்
1964ஆம் ஆண்டிலிருந்து 15 வருடங்கள் ;சட்ட்த்தரணியாக கொழும்பு நீதிமன்றில் கடமையாற்றியதுடன்; ; 1979ஆம் ஆண்டு; மாவட்ட நீதிபதியாக நீதித்துறையில் இணைந்;த மேல் நீதிமன்ற நீதிபதியாக மேன்முறையீட்டு நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசராக நீதித்துறையில் 25 ஆண்டுகளாக கடமையாற்றிவர்
நீதவான் நீதிமன்ற மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய காலகட்டங்களில் பல வழக்குகளில் நீதியும் நியாமுமான தீர்ப்புக்களை வழங்கியதினால் அதிகார வர்க்கத்தினால் பல இடமாற்றங்களுக்கு ஆளான ஒரு நீதிபதியாவார் ;;
; எந்தப் பாரபட்சமுமின்றி நேர்மைமைக்கு இலக்கனமாகச் செயல்பட்டு பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புக்களை;. வழங்கியவர் அது மட்டுமின்றி நீதிச்சேவையில் இருந்து ஒய்வு பெற்ற பின்னர் ;சமய சமூக சேவையாற்றி வரும் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இலங்கைத் தமிழர்கள்- செல்வது எங்கே‘என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற வருகை தந்துள்ளார் அவரை வருக வருக என வரவேற்கின்றோம்
தமிழ் மக்களின் நியாயமான அபிலாசையை அடைவதற்காக தந்தை செல்வாவுடன் தோளோடு தோள்நின்று நீண்ட காலமாக அகிம்சைவழிப் போராட்டத்தை நடாத்தியவர்;; சம்பந்தன் ஜயா
யுத்தத்தின் பின்னார் மாற்றமடைந்துள்ள களநிலைமையையும் யதார்தநிலைமையையும் புறக்கனித்து அரசியல் நடாத்துவது தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை; அடைவதற்கு துணை புரியமாட்டாது என்பதனைஉணர்ந்து களநிலைமைக்கு ஏற்ப எமது போராட்டத்தை முன்னின்று நடாத்தி வருகின்றார்
தமிழரசுக் கட்சியினதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் தலைவரும் மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிpய சம்பந்தன் ஜயா இந்த நிகழ்விற்கு தலைமை தாங்க வருகை தந்திருக்கின்றார்.அவரை தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளையின் சார்பாக வருக வருக என வரவேற்கின்றோம்
தந்தை செல்வா தமிழ் மக்களுக்காக மட்டுமின்றி தமிழ் பேசும் மக்களின் நியாயமான உரிமைகளுக்காகுவும் குரல் கொடுத்த ஒரு உத்தம தலைவராவார்;
வடக்குக் கிழக்கு தமிழர்களுக்குமட்டுமின்றி மலையகத் தமிழரின் உரிமைகள் பறிக்கப்பட்ட பொழுது தமிழ் காங்கிரசிலிருந்து; தனது உப தலைவர் பதவியை தூக்கி எறிந்தவர் 1972ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பை கடுமையாக எதிர்த்ததுடன் காங்கேசன் துறை நாடாளுமன்ற உறுப்பினர்; பதவியையும் துறந்தவர் தந்தை செல்வா 
1972ஆம் ஆண்டு புத்தளத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலில் எமது முஸ்லீம் சகோதரர்கள் தொழுகையில் ஈடுபடிருந்தபொழுது இராணுவத்தினர் நடாத்திpய தாக்குதல் சம்பவத்தை நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவித்த ஓரே தலைவர் தந்தை செல்வா ; இன்றும் எத்தனையோ முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் அமைச்சர்கள் தலைமைகள் காணப்பட்டபோதிலும் தமிழ்மொழியை பேசும் இஸ்லாமிய சகோதரர்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்படும் பொழுது ;அதனை கண்டித்;து நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய சமூகத்திற்காக குரல் கொடுத்த ஒரே தலைவர்; சம்பந்தர் ஜயா என்பதை நினைவு படுத்த விரும்புகின்றேன்
தந்தை செல்வா உண்மையில ஒரு தீர்க்கதரிசி தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்றைய நிலைமை நிச்சயமாக ஒருநாள் ஏற்படும் என்பதனை தந்தை செல்வா உணர்ந்திருந்தார்
அதனாலேயே சோல்பரி அரசியல் அமைப்பில் தேவையான அளவு பாதுகாப்பு சிறுபான்மை இனத்திற்கு வழங்கப்படவில.;லை என்பதனால் சோல்பரி அரசியல் அமைப்பை எதிர்த்தார்
பிரித்தானியா இலங்கையை விட்டு வெளியேறும் பொழுது சோல்பரி அரசியல் அமைபப்பை விட்டுச்சென்றது இந்த அரசியல் அமைப்பில் சிறுபாள்மையினரின் பாதுகாப்பிற்கென தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவே பிரித்தானியா கருதியது இந்த அரசியல் அமைப்புமூலம் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றே பிரித்தானியா எண்ணியது ஆனால் அந்த ஏற்பாடுகள் போதுமானதல்ல வலுவானதல்ல என்பதை வரலாறு நீருபித்துள்ளது
பிரித்தானியா இந்த நாட்டை விட்டு வெளியேறிவிட்டது சுதந்திம் அடைந்து விட்டோம் என்று வரலாறு கூறினாலும் பிரித்தானியா இந்த நாட்டில் விட்டுச் சென்றவுடன் காலத்திற்கு காலம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்புக்களால் எங்கள் உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன என்பதே நிதர்சனமான உண்மை
பிரித்தானியாவின் தாராளக் கொள்ளை இவ்வளவு தூரம் பிரச்சனைக்கு காரணமாகிவிட்டன அதற்காக நான் மனவருத்தம் அடைகின்றேன் என வீரசேரி வாரவேளியீட்டிற்கு 2006 ஆம்ஆண்டு பிரித்தானிய தூதுவரகா இலங்கை யில்கடமையாற்றிய தூதுவர் டொமினிக் சில்கொட் வழங்கிய செவ்வியை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்
பிரித்தானியர் நாட்டை விட்டுவெளியேறிய போதிலும் அவர்கள் விட்டுச்சென்ற பிரித்தாலும் கொள்கையை தொடர்ச்சியாக ஆட்சியமைத்த சிங்கள அரசுகள் மிக அழகாக நடைமுறைப்படுத்தின
சுதந்திரத்தின் பின்னர் மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் பல அரசியல் அமைப்புக்களை உருவாக்கியதுடன் தமது ஆட்சியை பலப்படுத்த பதவிகள் வசதிகள் சலுகைகள் அள்ளி வீசப்பட்டன இன்றும் வீசப்படுகின்றன இந்த அற்ப சொற்ப சலுகைகளுக்காக மக்களின் அபிலாசைகள் புறந்தள்ளப்பட்டு கொள்கைகள் புதைக்கப்படுகின்றன வரலாற்றுத் தவறுகள் தொடர்சியாக இழைக்கப்படுகின்றன
ஒரு தலைமையின் கீழ் இயங்கிய பல அரசியல் கட்சிகள் பல கட்சிகளாக சிதறடிக்கப்பட்டுள்ளன சில கட்சிகள் தங்கள் தலைமையை தக்கவைத்துக் கொள்ள முடியாத சுழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது இது தான் நிதர்சனமான உண்மை
ஒரு இனம் பாரம்பரியமாக வாழ்ந்த இடங்களை சட்டரீதியற்ற முறையில் ஆக்கிரமிப்பது இன அழிப்பின் முக்கியமான ஒரு அம்சம் அந்த நில ஆக்கிரமிப்பு சுதந்திரத்தின் பின்னர் ஆட்சியமைத்த அரசுகள் தொடர்ச்சியாக செயல் படுத்திய போதிலும் தற்பொழுது இன்று மிக வேகமாக நடைபெறுகின்றது
மொழியாலும் நிலத்தினாலும் ஒன்றோடு ஒன்றாக பின்னிப் பினைந்துள்ள தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள்; இந்த நாட்டை ஆட்சிபுரிந்த சிங்கள ஆட்சியாளர்களின் பிரித்தாலும் தந்திரத்தினால் ஒன்றாக இணைந்து ஒரு நியாயமான முடிவை எடுத்து எங்கள் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற முடியாமல் உள்ளமை ஒரு வேதனை நிறைந்த விடயம்
கிழக்கில் மாகாணசபை ஆட்சியைக் கைப்பற்ற தமிழ்பேசும் மக்கள் ஒரு பொன்னான சந்தர்ப்பத்தை வழங்கினர் ஆனால் இறுதியில் தமிழ்பேசும் மக்களின் நியாயமான அபிலாசைகள் நிறைவேற்றப்படவில்லை ஒரு வரலாற்றுத் தவறு நடந்து முடிந்து விட்டது இதற்கு பொறுப்பு யார் என்பது நான் கூறவேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றேன் நடந்தவற்றை நீங்கள் அறிவீர்கள்
நாங்கள் தந்தை செல்வா வழியில் ஜனநாயக முறைப்படி அமைதியான முறையில் தமிழ் மக்களின் அபிலாசையை நோக்கிப் பயணிக்கின்றோம் ஆனால் இந்த நாட்டின் அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை ஆட்சிpயாளர்கள் பின்பற்றுகின்றனரா? சமத்துவ உரிமை- சட்டத்தின்முன் அனைவரும் சமமானவர்கள்- ஒன்று கூடுவதற்கான உரிமை –கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் இலங்கை அரசியல் அமைப்பின் மூன்றாம் அத்தியாயத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கின்றது ஆனால் தமிழர்கள் கருத்துக்களை வெளியிட்டால் தமிழர்கள இரண்டாம் தர பிரஜைகளாக நடாத்தப்படுவது மட்டுமின்றி நான்காம் மாடிவிசாரணை அல்லது பயங்கரவாதத் தடைப்பிரிவு என்வபவற்றால் விசாரணை? ;ஜனநாயகரீதியில் ஒன்று கூடினால் கல்லுகளாலும் பொல்லுகளாளும் தாக்குதல் கடந்த சில மாதங்களாக யாழ் நகரிலும் தெல்லிப்பளையிலும் கிளிநொச்சியிலும் நடாத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டவர்களில் சிலரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைந்தனர் கள்ளனைப்பிடித்து கள்ளரிடமே ஒப்படைத்த கதையாக முடிந்துவிட்டது இது தான் ஜனநாயக நாடு என கூறிக்கொள்ளும் இந்த நாட்டின் சட்ட ஆட்சி
வடக்கு மாகாண சபைத் தேர்தல் இரண்டாம் ஈழப்போர் என தனிச் சிங்கள அமைச்சர் விமல் வீரவன்ச கூறியுள்ளார் அதற்காக அவருக்கு தமிழர்களாகிய நாங்கள் நன்றி கூற வேண்டும் ஒவ்வொரு வாக்குச்சீட்டும் ஒரு துப்பாக்கி ரவை என்பதனை அமைச்சர் நினைவு படுத்தியுள்ளார் எதிரிகளை காட்டிக் கொடுப்பவர்களை தமிழ் துரோகிகளை தேர்தல் என்ற போர்க் களத்தில் தோற்கடிக்க இந்த வாக்குச்சீட்டு எனும் துப்பாக்கிரவையை ஒவ்வொரு தமிழ் குடிமகனும் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் வட மாகாணசபைத் தேர்தல் வெற்றி எங்கள் அபிலாசைகளை நிறைவு செய்யாது எனினும் இந்த வெற்றியே எமது நீண்டகால அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான முதல்படியாக கருதி வட மாகாணசபை தேர்தலில் இமாலய வெற்றியீட்டுவது காலத்தின் கட்டாயம்
26-04 -2013 இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளையினால்
நடாத்தப்பட்ட 36ஆம் ஆண்டு தந்தை செல்வாவின் நினைவுப் பேருரை நிகழ்வில்.தமிழ் அரசுக் கட்சியன் கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவரான சட்டத்தரணி கே. வி தவராசாவினால் வழங்கப் பட்ட உரை

Geen opmerkingen:

Een reactie posten