தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 mei 2013

இணையத்தளங்களை ஊடறுக்க மென்பொருள் வழங்கிய நபர் கைது!


சிராணி பண்டாரநாயக்க - இரா. சம்பந்தன் - விஜித ஹேரத் ஆகியோருக்கு அழைப்பாணை
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 12:35.12 PM GMT ]
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன், மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித்த ஹேரத் ஆகியோரை மே மாதம் 29ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட விசேட மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்கு இன்று செவ்வாய்க்கிழமை அனுமதியளித்ததன் பின்னரே உயர்நீமன்றம் மேற்கண்டவாறு அழைப்பாணை அனுப்பிவைத்துள்ளது.
முன்னாள் பிரதம நீதியரசரை குற்றவாளியாக இனங்கண்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையை ரத்துச்செய்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட ஆணைகோரும் கட்டளையை வலுவற்றதாக்குமாறே சட்டமா அதிபரினால் இந்த விசேட மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த விசேட மேன்முறையீட்டு மனு நீதியரசர்களான சலீம் மர்சூக், சந்தியா ஹெட்டிகே மற்றும் ஈவா வனசுந்தர ஆகிய நீதியரசர்கள் குழு முன்னிலையிலேயே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இணையத்தளங்களை ஊடறுக்க மென்பொருள் வழங்கிய நபர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 03:04.55 PM GMT ]
இணையத்தளங்களை ஊடறுப்பதற்கு மென்பொருள் வழங்கிய நபர் ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மருசிறா என்ற பெயரில் இயங்கிய இணையத் தளத்தின் மூலம் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இணையத் தளங்களை ஊடறுப்பதற்கு தேவையான மென்பொருட்கள் மற்றும் அதற்கான கடவுச் சொற்கள் ஆகியனவற்றை குறித்த நபர் வழங்கியுள்ளார்.
கண்டியைச் சேர்ந்த கயான் ரொசான் சில்வா என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நபர் பற்றிய தகவல்களை இராணுவப் புலனாய்வுப் பிரவினர், புலனாய்வுப் பிரிவிற்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊடறுக்கப்பட்டு சேதம் விளைவிக்கப்பட்ட இணையத் தளங்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட உள்ளன.
குறித்த இளைஞரின் இணைய தளத்திற்குள் பிரவேசித்த இளைஞர்கள் கடவுச் சொற்களையும் மென்பொருளையும் கொள்வனவு செய்து இணையத் தளங்களுக்குள் ஊடுருவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten