தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 mei 2013

சீனக் கப்பலில் கச்சதீவை கண்காணிக்கும் சிறிலங்கா கடற்படை! இந்தியாவிற்கு அஸ்தமனம்


நீர்கொழும்பு கடற்கரையில் ஆபாசமாக நடமாடிய பெண்கள்

MAY 21, 2013 COMMENTS OFF
நீர்கொழும்பு கடற்கரையில் ஆபாசமாக நடமாடிய பெண்கள்
நீர்கொழும்பு – ஏத்துக்கால கடற்கரையில் அரை நிர்வாண நிலையில், மதுபோதையில் ஆபாசமாக நடமாடிய பெண்கள் மூவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்களுக்கு நீர்கொழும்பு மேலதிக நீதிவான் துவானி எஸ். வீரதுங்க தலா 2,500 ரூபா அபராதம் விதித்தார்.
குளியாப்பிட்டிய, கதிரானை, கோனவில பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களே அபராதம் விதிக்கப்பட்டவர்களாவர்.
கடற்கரையிலிருந்த பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடமாடிய இந்தப் பெண்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
பிரதிவாதிகள் மூவரும் தமக்கெதிரான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர்.

சீனக் கப்பலில் கச்சதீவை கண்காணிக்கும் சிறிலங்கா கடற்படை! இந்தியாவிற்கு அஸ்தமனம்

MAY 22, 2013 COMMENTS OFF
சீனக் கப்பலில் கச்சதீவை கண்காணிக்கும் சிறிலங்கா கடற்படை! இந்தியாவிற்கு அஸ்தமனம்
சீன தொழில் நுட்பத்துடன், சிறிலங்காவின் கடற்படையில் வைபவ் ரோந்து கப்பல் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.
இது கச்சைதீவை பாதுகாக்கும் நோக்கில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது.
இந்த கப்பலானது தேடுதல் மற்றும் மீட்புப்பணியில் முக்கிய கவனம் செலுத்தும்.
இந்த கப்பல் தடைகள் எதுவும் இன்றி, அதாவது அனைத்து வகையான காலநிலைகளிலும் ரோந்து செல்லும் வகையில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது 11 ரோந்து கப்பல்கள் கிழக்கு மற்றும் மேற்கு, அந்தமான் தீவுப்பகுதிகளில் ரோந்து பணியை மேற்கொண்டுள்ளன.
கச்சத்தீவு பகுதியில் இந்திய கடலோர காவல்படையோ, அல்லது கடற்படையோ ரோந்து பணியில் ஈடுபட முடியாது. ஏனெனில் அது சிறிலங்காவுக்கு உட்பட்ட பகுதியென சிறிலங்கா கடற்படைக் கமாண்டர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten