வட தமிழீழத்தில் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டிய அவசியம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இல்லையென இனவாத அமைப்பான பொதுபல சேனா தெரிவித்துள்ளது.
அவ்வாறான தேர்தலை நடத்த முன்னர் அங்கு சிங்கள மக்களை பதிவு செய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
பொதுபல சேனாவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
வட பகுதிகளில் சிங்களவர்களை குடியேற்றாமல், தேர்தல் நடத்த விடப் போவதி்ல்லை என அந்த அமைச்பு எச்சரித்துள்ளது.
இந்நிலையில் மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டும். நாட்டுப் பற்று இருந்தால் 13 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏனைய 8 மாகாண சபைகளிலும் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அனைவரும் பதவியை இராஜினாமா செய்து மக்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்.
வடக்குத் தேர்தல் இடம்பெற்றால் அது தமிழீழத்திற்கு வழி வகுக்கும். இரண்டாவது பிரபாகரனாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் செயற்படுகின்றார்.
வட மாகாண சபைத் தேர்தலை நிறுத்துமாறு நாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து கடிதம் எழுதியுள்ளோம். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுபல சேனா அனைத்து மக்களையும் ஒன்றுதிரட்டி வீதியில் இறங்கி போராடும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுபல சேனா என்ற இனவாத அமைப்பு, கோத்தபாயவின் அனுசரனையுடன் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தொலைபேசியில் மிரட்டினாரா குர்ஷித்? – பீரிஸ் விளக்கம்
MAY 22, 2013 COMMENTS OFF
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தம்மை அச்சுறுத்தும் வகையிலோ, அடக்குகின்ற வகையிலோ உரையாடவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை காலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் கல்மான் குர்ஷித் தொலைபேசி மூலம் உரையாடியிருந்தார்.
இதன்போது, மாகாணசபையின் அதிகாரங்களை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலான சட்டத்திருத்தங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் சல்மான் குர்ஷித் எச்சரித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதுகுறித்து நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜி.எல்.பீரிஸ்,
“13வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக அரசாங்கத்துக்குள் மூன்று கருத்துகள் உள்ளன.
ஒரு தரப்பு மாகாணசபைகளை எதிர்க்கிறது. இன்னொரு தரப்பு அதனை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்கிறது. மற்றொரு தரப்பு, சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்கிறது.
அரசாங்கத்துக்குள் 13வது திருத்தம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் இருப்பது ஜனநாயகத்தின் அடையாளம்.
இந்திய வெளிவிவகார அமைச்சருடன் அண்மையில் நடத்திய தொலைபேசி உரையாடல் தொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் முற்றிலும் கற்பனையே.
நாம் இனிமையாகவே கலந்துரையாடினோம். குர்ஷித் ஒரு அன்பான மனிதர்.
அவர் அச்சுறுத்தும் வகையிலோ, அடக்குகின்ற தொனியிலோ பேசவில்லை.“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten