தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 mei 2013

கால் நூற்றாண்டு பழமை வாய்ந்த பள்ளிவாசல் சிங்களவர்களால் இடிப்பு! கோதபாயவின் சதி


அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ பெண் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளார்!
[ புதன்கிழமை, 22 மே 2013, 03:39.55 PM GMT ]
அவுஸ்திலேரலியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக திகழ்வதாகத் தெரிவித்து  கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த  இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
41 வயதான மனோகலா ஜெனதர்ஸன் என்ற இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளரே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அவரது ஆறு வயது மகனும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
எனினும், ஆஸியோவின் அண்மைய தீர்மானத்திற்கு அமைய இவா்கள் தொடா்பில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளார். இவா்கள் தற்போது விலாவுட் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஆஸியோவின் தீர்மானத்திற்கு அமைய மனோகலாவும், அவரது ஆறு வயது மகனான ராகவனும் விடுவிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, தேவை ஏற்பட்டால் இவா்கள் தொடா்பாக மீண்டும் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்படும் என ஆஸியோ மேலும் அறிவித்துள்ளது.

கால் நூற்றாண்டு பழமை வாய்ந்த பள்ளிவாசல் சிங்களவர்களால் இடிப்பு! கோதபாயவின் சதி

MAY 21, 2013 COMMENTS OFF
கால் நூற்றாண்டு பழமை வாய்ந்த பள்ளிவாசல் சிங்களவர்களால் இடிப்பு! கோதபாயவின் சதி
சுமார் 124 வருடங்கள் பழமை வாய்ந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிவாசல் ஒன்று தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
பலாங்கொடை, குருகல இதிகொட்டுவ பிரதேசத்தில் அமைந்திருந்த பள்ளிவாசலே இவ்வாறு தரைமட்டமாக்கப்பட்டது.
சிவில் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் தொல்பொருள் திணைக்களம் இந்தப் பள்ளிவாசலை உடைத்துத் தரைமட்டமாக்கிய விடயம் தொடர்பில் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அங்கு சென்று தேவையற்ற கட்டடங்களை உடைப்பது தொடர்பில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten