தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 mei 2013

யாழ்ப்பாணத்துக்கு கஞ்சா கடத்திய இந்தியர் உட்பட6 பேர் கைது !


தேர்தல் ஆணையாளருக்கும் கட்சி செயலாளர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 03:14.20 AM GMT ]
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது.
ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் இன்று பிறப்கல் 3.00 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி பெயர் மாற்றம், கட்சியின் சொத்து விபர சமர்ப்பிப்பு, 2013ம் ஆண்டு வாக்காளர் இடாப்பு திருத்தம் மற்றும் நடைமுறைப் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட உள்ளது.
இதேவேளை, மாவட்ட துணை தேர்தல் ஆணையாளர்களுக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் மற்றுமொரு விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு கஞ்சா கடத்திய இந்தியர் உட்பட6 பேர் கைது ( யாழ். செய்தித் துளிகள்-4)
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 06:21.44 AM GMT ]
இந்தியக் கடல் மார்க்கமாக யாழ்ப்பாணத்துக்கு அதிவிசேட போதைப் பொருள் அடங்கிய கஞ்சாவைக் கடத்திய நான்கு இந்தியர் உட்பட ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவில் உற்பத்தியாகும் 101 கிலோ 850 கிராம் கஞ்சாவை கடல் வழியாக யாழ்.குடாநாட்டிற்குள் விற்பனைக்காக கடத்திய இந்தியர்கள் மற்றும் யாழ்.வேலணையைச் சேர்ந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்த கஞ்சா இரசாயனப் பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்வர்கள் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்.சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி மேலும் தெரிவித்துள்ளார்
யாழில் 3 கோடி 80 இலட்சம் ரூபா காசோலை மோசடி! ஜவர் கைது
யாழ்.மாவட்டத்தில் 3 கோடி 80 இலட்சம் ரூபாய் காசோலை மோசடி கடந்த வாரம் நடைபெற்றுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டுப் பதிவு குறிப்பிடுவதாக யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விடையம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
யாழில் நடைபெற்றுவரும் காசோலை மோசடி தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், யாழ்.பரமேஸ்வரா சந்தியில் உள்ள கடை ஒன்றில் 49 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.கஸ்தூரியார் வீதியிலுள்ள கடை ஒன்றில் 5 இலட்சம்,
யாழ்.நகரப் பகுதியில் 2 இலட்சம்,
நல்லூரில் 3 இலட்சம்,
மானிப்பாய் வடக்கு பகுதியில் 3 இலட்சம் ரூபா,
சாவகச்சேரி நகரப் பகுதியில் 3 இலட்சம் காசோலை மோசடி நடைபெற்றுள்ளதாக யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி கூறினார்.
யாழில் வர்த்தகத் துறையினரே இந்த காசோலை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் காசோலை மோசடி தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.
யாழில் 5 வயது சிறுதியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 59 வயது தாத்தா கைது
யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டப்பிராயில் 5 வயதுச் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 59 வயதுடைய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.சிரோஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்.
யாழ்.பொலிஸ் தலமையகத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த 5 வயதுச் சிறுமியை பற்றை ஒன்றுக்குள் அழைத்துச் சென்று அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். குறித்த சிறுமி வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விநாயகர் வீதி கொக்குவிலைச் சேர்ந்த 59 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் மே 10ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழில் 14 வயது சிறுமியுடன் 7 மாதம் குடும்பம் நடத்திய இளைஞன் கைது
யாழ்ப்பாணம் காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயதுச் சிறுமியுடன் 7 மாதம் குடும்பம் நடத்திய இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்.
கணவன் மனைவிபோல் 7 மாதங்களாக குடும்பம் நடத்திய 24 வயது இளைஞன் குறித்த சிறுமியை பாலியல் தேவைக்காக பயன்படுத்தியுள்ளதாகவும் குறித்த சிறுமி 14 வயதும் 6
மாதங்களையும் கொண்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இளவாலை மார்சன்கூடல் பகுதியைச் சேர்ந்த இளைஞன் குறித்த சிறுமதியை பாலியல் தேவைக்காக குடும்பமாக இருந்து வந்துள்ளதாகவும் குறித்த சிறுமியின் பொற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து குடும்பம் நடத்திய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரையும் எதிர்வரும் மே 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten