தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 mei 2013

அரசாங்கத்திற்கு நாட்டை நிர்வாகம் செய்ய முடியாது: திஸ்ஸ அத்தநாயக்க (செய்தித் துளிகள்)!


அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகளுக்கு ஐ.நா உயர் பதவி?
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 02:58.08 AM GMT ]
ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரீ ரம்புக்வெல்லவிற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் சகல மாநாடுகளுக்கும் ஆலோசனை வழங்கும் குழுவின் தலைமைப் பொறுப்பு சமித்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் சகல மாநாடுகள் தொடர்பிலும் சமித்ரீ தலைமையிலான குழு ஆலோசனை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
முதல் தடவையாகவே இந்த ஆலோசனைக் குழுவின் தலைமைப் பதவி இலங்கையர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சமித்ரீ ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கைக்கான வதிவிட அலுவலகத்தில் இரண்டாம் நிலைச் செயலாளராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்திற்கு நாட்டை நிர்வாகம் செய்ய முடியாது: திஸ்ஸ அத்தநாயக்க (செய்தித் துளிகள்)
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 03:33.29 AM GMT ]
தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டை நிர்வாகம் செய்ய முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டை நிர்வாகம் செய்யவும், நாட்டை அபிவிருத்தி செய்யவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமே முடியும்.
அரசாங்கம், மின்சாரக் கட்டணங்களை 100 வீதத்தினால் உயர்த்தி, 20 வீத நிவாரணம் வழங்கியுள்ளது.
மக்கள் பல்வேறு பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியமானது.
நாட்டு சிறந்த முறையில் ஆட்சி செய்யக் கூடிய ஆற்றல் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடமே காணப்படுகின்றது என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை ஊடகங்கள் அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுகின்றன!- ஜே.வி.பி
இலங்கையில் பல்வேறு ஊடகங்கள் பொறுப்பற்ற விதத்திலும் அரசாங்கத்திற்கு சார்பாகவும் செயற்பட்டு வருவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
அதன் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
மின்சார அதிகரிப்புக்கு எதிராக நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி மே தின ஊர்வலத்தில் அறிவித்திருந்தமை தொடர்பில் இலங்கையின் அனைத்து ஊடகங்களும் முன்னுரிமை வழங்கி செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும் இந்த மின்சார அதிகரிப்பின் பின்னணியில் ஜனாதிபதியே இருப்பதாகவும் அதனை இலங்கையின் எந்த ஊடகமும் விமர்சிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஊடகங்கள் பொறுப்பற்று செயற்படுவதால் மக்களுக்கு பிழையான செய்திகளே சென்றடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் ஊடக விதிகளுக்கு அமைய ஜனாதிபதியை நேரடியாக விமர்சிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten