[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 04:26.45 AM GMT ]
மகிழவட்டுவான் கல்குடா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான விஜயகுமார் தீபா (வயது 20) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீடொன்றினுள் சடலமொன்று காணப்படுவதாக கிடைத்த தகவலையடுத்தே அவ்வீட்டிலிருந்து சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கணவர் கட்டார் நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக தொழில் செய்பவரென உறவினர்கள் தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி சுகத்பண்டார விஜேசுந்தர தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டனர்.
இவரது சடலம் பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சியில் உதிரவேங்கை வைரவர் ஆலயம் உடைக்கப்பட்டு விக்கிரகங்கள் கொள்ளை
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 07:25.05 AM GMT ]
கிளிநொச்சி தொண்டமான்நகரில் அமைந்துள்ள உதிரவேங்கை வைரவர் ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு ஐம்பொன்னால் ஆன முருகன் விக்கிரகம், கருங்கல் விக்கிரகங்களுக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன்தகடுகள் மற்றும் ஆலய ஒலிபெருக்கி சாதனம், ஆலய உபகரணங்கள் நேற்றிரவு கொள்ளையிடப்பட்டிருக்கின்றது.
இன்று காலை ஆலயத்தை வழிபடச் சென்றவர்கள் ஆலயம் உடைக்கப்பட்டு இருந்ததை அவதானித்து பரிபாலனசபைக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதே வேளை ஆலயக் காணியைக் கரைச்சிப் பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் பெரும்பான்மை இனத்தவர் ஒருவருக்கு வழங்கியுள்ளார்.
இதற்கு இப்பிரதேச மக்கள் எதிர்ப்புக்களைத் தெரிவித்து பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த காணியை அபகரிக்கும் நோக்குடனேயே இவ்வாலயத்தின் மீதான கொள்ளைச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten