தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 mei 2013

பிரிவினையுடன் கூடிய வடக்கு தேர்தல் வேண்டாம்: தே.சு.மு ஆர்ப்பாட்டம்!


காரைதீவில் 11 நாட்களின் பின் உருக்குலைந்த நிலையில் மாணவனின் சடலம் மீட்பு- மினி சூறாவளி- 5 இயந்திரப் படகுகள் முற்றாக சேதம்
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 06:37.58 AM GMT ]
காரைதீவு கடலில் மூழ்கிய மாணவன் ஒருவரின் சடலம் 11 நாட்களின் பின்பு இன்று காலை காரைதீவு நிந்தவூர் எல்லை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.
சதாசிவம் சஞ்சீவராஜ் என்ற மாணவனின் சடலமே கரையொதுங்கியுள்ளது.
சம்மாந்துறை நீதிவான் கே.கருணாகரம் சடலத்தை நேரில் பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த மாணவனின் சடலம் உருக்குலைந்த நிலையிலுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடல் சீற்றத்தால் 5 இயந்திரப் படகுகள் முற்றாக சேதம் 1 கோடி ருபா நஸ்ட்டம்
கல்முனை சாய்ந்தமருது காரைதீவு கடலில் நேற்று ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் 05 பாரிய இயந்திரப் படகுகள் கடலில் அமிழ்ந்து முற்றாக சேதமடைந்துள்ளன. இதன் பெறுமதி 1கோடி ருபா எனக் கூறப்படுகிறது.
சேதமடைந்த படகை வேறொரு படகின் மூலம் மீனவர்கள் மீட்டுள்ளதுடன், கடலில் சிக்கிய வலைகளை இயந்திரப் பாரந்தூக்கி மூலம் மீட்டதாக தெரிவித்துள்ளனர்.
காரைதீவில் மினி சூறாவளி
காரைதீவில் இன்று அதிகாலை வீசிய மினி சூறாவளியால் காரைதீவு இ.கி.மிசன் பெண்கள் பாடசாலை சுற்று தகர வேலி, காரைதீவு பிரதான வீதியிலுள்ள விபுலானந்தா சதுக்கத்திலுள்ள விளம்பரப் பலகைகள், விபுலானந்தா மொன்டிசோரி தகரங்கள், மற்றும் மீன் வாடி என்பன சேதமடைந்துள்ளன.

பிரிவினையுடன் கூடிய வடக்கு தேர்தல் வேண்டாம்: தே.சு.மு ஆர்ப்பாட்டம்
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 05:42.15 AM GMT ]
பிரிவினை வாதத்துடன் கூடிய வடக்கு தேர்தல் வேண்டாம் என்ற தொனிப் பொருளில் நாட்டு மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தேசிய சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது.
இதற்காக பத்து லட்சம் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவுள்ளதாக அக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்சவின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று மாலை 3.00 மணியளவில் கொழும்பு, புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னதாக இடம்பெறவுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten