தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 15 mei 2013

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு 30 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்


மன்னார் மாவட்டத்தில் அதிக நிலுவைகளைக் கொண்டவர்களின் மின்னிணைப்பு துண்டிப்பு
[ புதன்கிழமை, 15 மே 2013, 10:58.03 AM GMT ]
மன்னார் மாவட்டத்தில் அதிக நிலுவைகளைக் கொண்ட 950 பாவனையாளர்களுடைய மின்சார இணைப்புக்களை துண்டிக்கப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட மின்சார சபையின் மின் அத்தியட்சகர் மிஸ்ரக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கருத்து வெளியிடுகையில்,
மன்னார் மாவட்டத்தில் அதிக நிலுவைகளைக் கொண்ட மின் பாவனையாளர்களை உடனடியாக தமது மின்பாவனைக்காண கட்டண நிலுவைகளை செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பை தவிர்த்துக்கொள்ளுமாறும், அதற்கான அவகாசத்தையும் மன்னார் மின்சார சபை பாவனையாளர்களுக்கு வழங்கியிருந்ததாக கூறினார்.
ஒலி பெருக்கி மூலமும் பொது அறிவித்தல்களும் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் முதல் கட்டமாக அறிவித்தல்களையும் மீறி இறுதி நிலுவைத் தொகை 25 ஆயிரம் ரூபாவிற்கு மேல் உள்ள 950 மின் பாவனையாளர்களின் விபரங்கள்
திறட்டப்பட்டு அவர்களுடைய இணைப்புக்கள் தற்போது துண்டிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது 550 பாவனையாளர்களுடைய இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 400 பாவனையாளர்களுடைய இணைப்புக்கள் துண்டிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
துண்டிக்கப்பட்ட மின்னிணைப்புக்களில் பாடசாலை, வீடு, வர்த்தக நிலையங்கள், நிறுவனங்கள் ஆகியவை உள்ளடங்குகின்றது.
மேலும் எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் நிலுவைத்தொகை செலுத்தாத அணைத்து மின் பாவனையாளர்களுடைய மின் இணைப்புக்களும்
துண்டிக்கப்பட்வுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போது துண்டிக்கப்பட்ட இணைப்புக்களை மீளப்பெற மின் பாவணையாளர்கள் தங்களின் நிலுவைகளில் 2 வீதம் தண்டப்பணமும், மீள் இணைப்புத்தொகையாக 800 ரூபாவும் செலுத்த வேண்டும் என மன்னார் மாவட்ட மின்சார சபையின் மின் அத்தியட்சகர் மிஸ்ரக் மேலும் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு 30 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்
[ புதன்கிழமை, 15 மே 2013, 10:46.11 AM GMT ]
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 30 இலங்கையர்கள் விமானம் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர்.
அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 30 பேரே இவ்வாறு இலங்கை வந்தடைந்ததனர்.
கே.எஸ்.வை 856 ரக விமானம் மூலமே அவர்கள் கட்டுநாயக்க வானுர்தி நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இலங்கை அரச புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten