தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 15 mei 2013

யாழ். மாவட்ட காணி சுவீகரிப்பு அலுவலக பொறுப்பதிகாரி இராஜினாமா?


ஜனநாயகத்தின் உன்னதமான இடம் உள்ளுராட்சி சபைகளுக்கு கிடைத்துள்ளது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
[ புதன்கிழமை, 15 மே 2013, 11:10.05 AM GMT ]
ஜனநாயகத்தின் உன்னதமான இடம் உள்ளுராட்சி சபைகளுக்கு கிடைப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
உகண்டாவில் இடம்பெறும் பொதுநலவாய உள்ளுராட்சி மன்ற மாநாட்டில் பிரதான உரையை ஆற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
இதனிடையே, உள்ளுராட்சி மன்றங்களுடாக மக்களுக்கு ஏராளமான சேவைகளை செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை இலங்கை முன்னெடுத்து வருவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட காணி சுவீகரிப்பு அலுவலக பொறுப்பதிகாரி இராஜினாமா?
[ புதன்கிழமை, 15 மே 2013, 01:11.39 PM GMT ]
யாழ்.மாவட்டத்தில் பரவலாக இராணுவத்திற்கான காணி சுவீகரிப்பிற்கு உத்தரவிட்ட யாழ். மாவட்ட காணி சுவீகரிப்பு அலுவலகத்தின் பொறுப்பதிகாரி ஆ.சிவசுவாமி தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டு அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றிருந்த ஆ.சிவசுவாமி, அண்மையில் காணி சுவீகரிப்பு அலுவலகத்தின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் பரவலாக இராணுவத்திற்கான காணி சுவீகரிப்பதற்கான ஒப்புதலை இவரே வழங்கியிருந்தார்.
இதேவேளை, கடுமையான மன அழுத்தத்தினால் கடந்த மாதமே இவர் பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னரே அவர் பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்தார்.
மேலும் கடிதம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து அவர் கடமைக்குச் செல்லவில்லையெனவும் தெரிவிக்கப்படுவதுடன், இந்த தகவல் குறித்து மாவட்டச் செயலகத்துடன் தொடர்பு கொண்டபோது, அது குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்

Geen opmerkingen:

Een reactie posten