[ திங்கட்கிழமை, 20 மே 2013, 04:06.33 AM GMT ]
இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் கனடா நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என்பது குறித்து கவனிக்கப்பட உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடத்தப்படுவது குறித்து கனடாவும் பஹாமாஸூம் அண்மையில் நடாத்திய பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டின் உண்மையான நிலைமைகள் குறித்து அந்தந்த நாடுகளுக்கு தெளிவுபடுத்துமாறு வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு படையினரால் தொடரும் அச்சுறுத்தல்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 04:12.36 AM GMT ]
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை திரும்பப் பெறுமாறு மனுதாரர்களுக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான முன்னாள் போராளிகள் 2009 ம் ஆண்டு மே 18ம் திகதி இராணுவத்தினரின் அறிவித்தலுக்கு அமைய சரணடைந்திருந்தனர்.
இதன் பின்னர் சரணடைந்தவர்கள் அவர்களது உறவினர்களின் கண்ணெதிரே படையினரால் பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். எனினும் அதன் பின்னர் அவர்களது நிலை என்னவென்று தெரியா நிலையில் அவர்களது உறவினர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சரணடைந்து காணாமல் போனவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளவர்களில் ஐந்து பேர் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் ஆட்கொணர்வு மனுக்களை கடந்த மார்ச் மாதம் 20ம் திகதி வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து, முல்லைத்தீவில் உள்ள 58ம் படைப்பிரிவின் தலைமை அதிகாரியையும், இராணுவ தளபதியையும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகி இது தொடர்பில் சாட்சியமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் வழக்கைத் திரும்பப் பெறுமாறு அதனைத் தாக்கல் செய்தவர்களுக்கு, தொலைபேசியூடாகவும், நேரிலும் சீருடையினர் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.இதன் காரணமாக அவர்கள் வழக்கை தொடர்ந்து நடத்துவது குறித்து அச்சம் அடைந்துள்ளனர்.
எனினும், குறித்த வழக்கில், வழக்கை தாக்கல் செய்தவர்களை தமது அமைப்பினர் பாதுகாப்பாக அழைத்து வந்து நீதிமன்றில் இன்று முற்படுத்துவர் என்று காணாமல் போனோரை தேடிக் கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten