கொழும்பில் மின்சாரக் கட்டணத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் பாரிய பேரணி - அரசாங்கத்தை கவிழ்க்கும் போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும்!- ஐ.தே.க
[ புதன்கிழமை, 15 மே 2013, 02:17.16 AM GMT ]
கொழும்பு கெம்பல மைதானத்தில் ஆரம்பமாகி கொழும்பு கோட்டே வரையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் பாரிய பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
மின்சாரக் கட்டணங்களை குறைக்குமாறு கோரி இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இந்தப் பேரணி ஆரம்பமாகவுள்ளது.
ஜே.வி.பி தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மத அமைப்புக்கள் உள்ளிட்ட பலர் இந்த பேரணியில் பங்கேற்க உள்ளனர்.
அனைத்து தரப்பினரும் கட்சி பேதமின்றி இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் இன்று பேரணியொன்று நடைபெறவுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான சூழ்ச்சித் திட்டங்களை முறியடிப்போம் என்ற தொனிப்பொருளில் இந்தப் பேரணியும் போராட்டமும் நடைபெறவுள்ளது.
போர் வெற்றியை உறுதிப்படுத்தல் நாட்டின் ஐக்கியத்தை கட்டியெழுப்புதல் போன்றவற்றை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்தப் பேரணி கொழும்பு லேக் ஹவுஸ் சுற்று வட்டத்தில் ஆரம்பமாகி கொழும்பு கோட்டையை அடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தை கவிழ்க்கும் போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும்!- ஐ.தே.க
அரசாங்கத்தை கவிழ்க்கும் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் மக்கள் செல்லக் கூடிய தூரம் நிறைவடைந்துள்ளது. ஊழல் மோசடி மிக்க அரசாங்கத்தை கவிழ்க்கும் தேசிய போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் இணைந்து கொள்ள வேண்டும்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டின் மூலம் நாட்டுக்கு கௌரவம் ஏற்பட்டால் அதனை தடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. எனினும், இந்த மாநாட்டை போர்வையாகக் கொண்டு மோசடிகள் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
வாகனக் கொள்வனவு மற்றும் ஏனைய வசதிகளை செய்து கொடுக்கும் போர்வையில் மோசடிகள் இடம்பெற்று வருகின்றன. அரசாங்கத்தின் கொடுக்கல் வாங்கல்களில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் கிடையாது.
அமைச்சரவையின் அனுமதியின்றி அதி சொகுசு வாகனங்கள் தருவிக்கப்பட உள்ளன.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை பணம் சம்பாதித்துக் கொள்ளும் வழிமுறையாக சிலர் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் மாநாட்டை நடத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ராஜகிரியாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சனல்4 காணொளி குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக இலங்கை அறிவிப்பு
[ புதன்கிழமை, 15 மே 2013, 03:22.22 AM GMT ]
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் தலைமை தூதுவர் பி.எம். ஹம்சா நேற்று ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த காணொளிகளுக்கான உண்மையான ஆதாரங்களை தங்களிடம் கையளிக்குமாறு அரசாங்கம் சனல்4 விடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வின் பின்னர் செனல் 4 தொலைகாட்சி இறுதியாக தயாரித்த மோதல் தவிர்ப்பு வலயம் காணொளி திரையிடப்பட்டது.
இதனை சர்வதேச மன்னிப்பு சபையும், சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இதன் போது உரையாற்றிய பீ.எம்.ஹம்சா, இந்த காணொளியில் தமிழ் மக்கள் பேசுகின்ற விடயங்கள் திரிபு படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த மக்கள் தாக்குதல் நடத்துகின்றனர் என்றே கூறுகின்றனர், எங்கும் இராணுவனம் தாக்குதல் நடத:துகிறது என்று தமிழில் கூறவில்லை.
எனினும் இராணுவம் தாக்குதல் நடத்துகின்றனர் என்று மக்கள் கூறுவதாக சனல்4 தொலைக்காட்சி திரிபு படுத்தி கூறி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
சனல்4 தொலைகாட்சி திட்டமிட்டே இலங்கை மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten