அரசியலிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்ளப் போவதாக ஹிருனிகா அறிவிப்பு
அரசியலிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்ளப் போவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் புதல்வி ஹிருனிகா பிரேமசந்திர அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை சாதகமானதாக இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே தற்காலிக அடிப்படையில் அரசியல் நடவடிக்கைகளிலிருங்கு ஒதுங்கிக்கொள்ளப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.முழு அளவில் அரசியலில் ஈடுபடுவதற்கு போதியளவு ஆதரவு தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டக் கல்லூரி பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் அரசியலில் ஈடுபடுவது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் அரசியல் செய்வது மிகவும் கடினமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.குடும்பத்தாருடன் இணைந்து பேசி அரசியலில் ஈடுபடுவது குறித்து இறுதித் தீமானம் எடுக்கப்படும் என ஹிருனிகா தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை!
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் இன்னமும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்கள் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க தடையாக அமைந்துள்ளது என சில தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனினும், 13ம் திருத்தச் சட்டத்தின் சில பகுதிகளை ரத்து செய்வதா இல்லையா என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அவா குறிப்பிட்டுள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் எவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டாலும், செப்டம்பர் மாதம் வட மாகாணசபைத் தேர்தல் நடாத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அனைத்து கூட்டணி கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் எனவும், அது கூட்டணி கட்சிகளின் தார்மீகப் பொறுப்பாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தலுக்காக வேட்பாளர்கள் தெரிவு நடைபெறவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.உரிய பொருத்தமானவர்கள் தேர்தலில் களமிறக்கப்டுவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten