[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 04:57.42 PM GMT ]
தமது இலங்கை விஜயத்தின்போது அவர் பல முக்கிய சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். புதிய அரசாங்கத்தின் புதிய அரசியல் மாற்றங்களுக்கு பின்னர் என்ற அடிப்படையில் இந்த பேச்சுக்கள் அமையவுள்ளன.
ஐக்கிய நாடுகளின் உதவிசெயலாளர் தமது விஜயத்தின்போது வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
இறுதிப்போரில் இறந்தவர்களுக்கு இறுதி வணக்கத்தை செலுத்தியது அமெரிக்கா
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 05:01.27 PM GMT ]
இலங்கையில் தமது விஜயத்தை முடித்துக் கொண்ட அமெரிக்காவின் ஜனநாயக, மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் துறையின் உதவிச்செயலாளர் டொம் மலிநௌஸ்கி இதனை தெரிவித்துள்ளார்.
வன்னியில் இறுதிப்போர் இடம்பெற்ற இடத்துக்கு சென்றபோது தமது உணர்வுபூர்வமான நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து போரினால் இறந்த இரண்டு தரப்பினருக்கும் அங்கு இறுதிமரியாதை செலுத்தியதாக டொம் குறிப்பிட்டார்.
இதேவேளை முஸ்லிம்கள் தாக்கப்பட்ட அளுத்கமை நகருக்கு சென்ற அவர் அரசாங்கம், பொறுப்புக்கூறலை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்தநிலையில் புதிய அரசாங்கம் அமெரிக்காவின் உதவியுடன் பல விடயங்களில் முன்னேற்றமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில் போரின்போது காணாமல் போனோர் தொடர்பில் தாமதமின்றி பதில் வழங்கப்பட வேண்டும் என்றும் டொம் கோரிக்கை விடுத்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyETYSUkr3B.html
மகிந்தரின் கூட்டத்தை விட மைத்திரியின் கூட்டத்திலேயே அதிக கெடுபிடிகள்: பிராந்திய ஊடகவியலாளர்கள்!
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 05:19.50 PM GMT ]
மட்டக்களப்புக்கு இன்று ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன விஜயம் செய்திருந்தார்.அதன் போது அங்கு செய்தி சேகரிக்க சென்ற தாம் பல்வேறு கெடுபிடிக்களுக்கு உள்ளானதாகவும்,
4.30மணி நிகழ்வுக்கு 3.00மணிக்கே நிகழ்வு நடைபெறும் பகுதிகளுக்கு வரவேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட நிலையில்,நிகழ்விற்கு வருகை தந்த செய்தியாளர்கள் கடுமையான முறையில் சோதனைகளுக்குட்படுத்தப்பட்டதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ விஜயம் செய்த போது இருந்த கொடுபிடிகளை விட மைத்திரிபாலவின் விஜயத்தின்போதே இந்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு உட்பட்டதாக நிகழ்வில் கலந்துகொண்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ விஜயம் செய்த போது இருந்த கொடுபிடிகளை விட மைத்திரிபாலவின் விஜயத்தின்போதே இந்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு உட்பட்டதாக நிகழ்வில் கலந்துகொண்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரமாக செய்தி சேகரிக்கும் நிலைமையேற்படும் என கடந்த தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால வழங்கிய போதிலும் இன்று அந்த உறுதிமொழிக்கு நேர்மாறாக தம்மை கெடுபிடிகளுக்கு உட்படுத்தியுள்ளதாக கவலை தெரிவிக்கும் ஊடகவியலாளர்கள்,இன்று ஜனாதிபதியின் வருகையையொட்டி மட்டக்களப்பின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தேர்தல் பிரசாரத்திற்காக ஜனாதிபதி மைத்திரிபால மட்டக்களப்புக்கு வருகைதந்தபோது ஊடகவியலாளர்களுக்கு எந்தவித கெடுபிடிகளும் இல்லாமல் தாம் அருகில் சென்று செய்தி சேகரிக்க முடிந்ததாகவும் ஆனால் இன்றைய சந்தர்ப்பம் முற்றிலும் வேறுபட்டதாக இருந்ததாகவும் மேலும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyETYSUkr3C.html
Geen opmerkingen:
Een reactie posten