[ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 06:11.49 AM GMT ]
காமினி லொக்குகே, குமார் வெல்கம, டளஸ் அழகபெரும, பந்துல குணவர்தன, விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தன, ஜீ.எல். பீரிஸ், டி.பி. ஏக்கநாயக்க, எஸ்.எம். சந்திரசேன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மகிந்தானந்த அளுத்கமகே, சாலிந்த திஸாநாயக்க, சரத் குமார குணரத்ன, ரோஹித்த அபேகுணவர்தன, வீரகுமார திஸாநாயக்க, விதுர விக்ரமநாயக்க,
ரஞ்சித் டி சொய்சா, ஜானக்க வக்கும்புர, வீ.கே.இந்திக, ரொஷான் ரணசிங்க, ஜானக்க பிரிந்த பண்டார, ஸேஹான் சேமசிங்க, மனுஷ நாணயக்கார, எதித்த லொக்குபண்டார, கீதாஞ்சன குணவர்தன, திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தே, சரண குணவர்தன, வை.பி. பத்மசிறி, சாமிக புத்ததாச, லக்ஷமன் வசந்த பெரேரா,
ஸ்ரீயானி விஜேவிக்ரம, மாலனி பொன்சேகா, சரத் வீரசேகர ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களே முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்கு விருந்தாளி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.
மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மஹிந்தவை பார்வையிட செல்ல உள்ளனர்
மத்திய செயற்குழவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பார்வையிடச் செல்ல உள்ளனர்.
பந்துல குணவர்தன, எச்.எம்.சந்திரசேன, சாலிந்த திஸாநாயக்க, டி.பீ.ஏக்கநாயக்க மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் முன்னாள் ஜனாதிபதியை பார்வையிடச் செல்ல உள்ளனர்.
சிங்கள புத்தாண்டு மரபுகளில் ஒன்றான உறவினர்களை பார்வையிடும் நிகழ்விற்காக இவ்வாறு ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மெதமுலனவிற்கு செல்ல உள்ளனர்.
நாளை குறித்த ஐந்து பேரும் மஹிந்தவை பார்வையிட மெதமுலனவிற்கு செல்ல உள்ளனர்.
ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காமல் தம்மை மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கியதாக இவர்கள் முன்னாள் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாளை மஹிந்தவை பார்வையிடச் செல்வார்கள் என முன்னாள் அமைச்சர் குமார வெல்கம சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு மேலதிகமாக ஏற்கனவே மஹிந்தானந்த, விமல் வீரவன்ச, குமார் வெல்கம, டலஸ் அழப்பெரும, மனுஸ நாணக்கார, உதித்த லொக்குபண்டார உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதியை பார்வையிட செல்ல உள்ளனர்.
தொடர்புடைய செய்தி:
http://www.tamilwin.com/show-RUmtyESZSUkx5G.html
தொடர்ந்து ஏற்பட்ட மறைவுகளினால் புதுவருடத்தை தவிர்த்த மைத்திரி
[ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 06:27.36 AM GMT ]
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விண்ணுலகை எட்டியதாலும், அவரின் சகோதரனின் மறைவினாலும் நேற்று மலர்ந்த புதுவருடத்தை ஜனாதிபதி தவிர்த்து விட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் புதுவருடத்தை கொண்டாடாத போதிலும், அவரை ஜனாதிபதியாக்கிய நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவிக்க மறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டார் என தெரிவித்து அவரது சகோதரரின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ளாத ஜனாதிபதி இன்று அவருக்காக துக்கம் கொண்டாடுவது ஏன்?
நாட்டு மக்களின் அனுதாபத்தை பெற்று கொண்டு தனது அரசியல் வாழ்க்கையை நீடிக்க மேற்கொள்ளும் சூழ்ச்சியா என அரசியல் ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை அமெரிக்கா, பிரித்தானியா, உள்ளிட்ட நாடுகள் இலங்கை வாழ் மக்களுக்கு தமது புதுவருட வாழத்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடக்குமுறையற்ற ஜனநாயக ரீதியான தலைவர் மைத்திரி: நந்திமித்ர
[ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 06:57.20 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வழிநடத்தக்கூடிய ஆற்றல் உண்டு என அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நிர்வாகம் செய்ய முடியவில்லை என செய்யப்படும் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல.
அடக்குமுறையற்ற ஜனநாயக ரீதியான தலைவராக மைத்திரிபால சிறிசேனவை அடையாளப்படுத்த முடியும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் நுட்பமான முறையில் அரசாங்கத்தை எவ்வாறு முன்நகர்த்த வேண்டும் என்பதனை உணர்ந்து புரிந்து கொண்டு வழிநடத்துகின்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினராக என்னை நியமித்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதுவரையில் எனக்கு இது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை.
இதேவேளை மத்திய செயற்குழுவிலிருந்து ஐந்து உறுப்பினர்கள் நீக்கப்பட்டை செயலானது விரும்பத்தக்க செயலன்று, அந்த உறுப்பினர்கள் கட்சியின் அபிவிருத்திக்காக செயற்பட்டுள்ளனர் எனவும் நந்திமித்ர ஏக்கநாயக்க சர்வதேச ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
தனது காணியை விடுவிக்குமாறுகோரி தாயொருவர் பரந்தனில் உண்ணாவிரதம்
[ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 07:52.34 AM GMT ]
இராணுவத்தினரின் பிடியில் இருக்கும் தனது காணியை விடுவித்து, தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரி தாயொருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார்.
திருமதி இந்திரா யோகேந்திரன் என்ற பெண்ணே இவ்வாறு உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.
பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் மக்கள் தொடர்பு அலுவலகம் அமைந்துள்ள காணியே தனது காணி எனவும் அதனை விடுவிக்க கோரி அந்தத் தாயார் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
குறித்த காணி 7 ஏக்கர் பரப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyESZSUkx6G.html
Geen opmerkingen:
Een reactie posten