[ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 10:59.23 AM GMT ]
நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ள 18 மீன்பிடி படகுகளை திருத்தி மீண்டும் இந்தியாவுக்கு எடுத்து செல்வதற்காக இரண்டு மீனவ குழுக்கள் இன்று இலங்கை வந்துள்ளன.
இந்திய மீனவர்களின் 12 படகுகள் கரையூர் பிரதேசத்திலும், 6 படகுகள் தலைமன்னார் பிரதேசத்திலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றுது.
143 பேர் கொண்ட இந்த மீனவர்கள் குழு, படகு திருத்தும் இயந்திரங்களை கொண்டு வந்துள்ளதுடன் படகுகளை திருத்திய பின்னர் இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல உள்ளனர்.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகு ஒன்றின் விலை 5 லட்சம் இந்திய ரூபா என இந்திய மீன்வளத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
- தொடர்புடைய செய்தி: தமிழக மீனவ குழுவினர் நாளை இலங்கை விஜயம்
100 நாள் நிறைவையொட்டி நாளை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை!
[ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 10:40.23 AM GMT ]
ஜனாதியின் உரை நாளை இரவு 9 மணிக்கு இலங்கையின் அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடி ஒலி, ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை குறித்து அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையாற்றவுள்ளார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையாற்ற உள்ளது.
சகல இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாக இந்த விசேட உரை நிகழ்த்தப்பட உள்ளது.
நாளை இரவு 9.00 மணிக்கு ஜனாதிபதி உரையாற்ற உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளையுடன் அரசாங்கத்தின் நூறு நாள் திட்டம் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் நூறு நாள் திட்டம் குறித்து ஜனாதிபதி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten