தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 april 2015

மின்சார நாற்காலிக்கு அஞ்சாதவர்கள், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு செல்ல அஞ்சுகின்றனர்: அலவத்துவல

19 வது திருத்தச் சட்டத்தை தடுக்கும் சூழ்ச்சி பற்றி கூறும் ஜனாதிபதி
[ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 08:56.11 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இலஞ்ச ஆணைக்குழு அழைப்பாணை அனுப்பியமை மற்றும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை தடுக்கும் சூழ்ச்சிகள் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை ஆட்சிக்கு கொண்டு வர பங்களிப்புச் செய்த சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை ஏற்படுத்தி அவருக்கு ஆதரவு வழங்கிய, தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்றிரவு ஜனாதிபதியை சந்தித்தனர்.
நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பு, பிரஜைகள் சக்தி, .இடதுசாரி மையம் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி இந்த சந்திப்பில் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதிக்கு இலஞ்ச ஆணைக்குழு அறிவிப்பாணை அனுப்பியமையானது 19வது திருத்தச் சட்டத்தை தடுக்கும் சூழ்ச்சியாகும்.
இந்த அறிவிப்பாணை அனுப்பி வைக்கப்பட்டதை ஆணைக்குழுவின் தலைவர் பாலபட்டபெந்தி அறிந்திருக்கவில்லை. அறிவிப்பாணை அனுப்பும் போது இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாட்டில் இருக்கவில்லை. யார் முன்னாள் ஜனாதிபதிக்கு அறிவிப்பாணை அனுப்பினர்கள் என்பது தெரியவில்லை.
நிறைவேற்று அதிகாரங்களை கைவிட நான் தயாராக இருப்பதால், நிறைவேற்று அதிகாரத்தை நான் பயன்படுத்துவதில்லை.
இதனால், இலஞ்ச ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நான் மாற்றவில்லை. ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் பெரும்பாலானோர் முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவர்கள்.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதை முன்னிட்டு நான் ஆரம்ப உரை நிகழ்த்தும் நோக்கில் சென்றிருந்தேன். எனக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் நகல் பிரதிகள் வெட்டி கொத்தப்பட்டு தாறுமாறாக மாற்றப்பட்டிருந்ததுடன் வாசிக்க முடியாதபடி காணப்பட்டது.
இதுவும் 19வது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கு எதிரான சூழ்ச்சியாகவே நான் கருதுகிறேன்.
அரசாங்கத்திடம் இருக்கும் பணத்தை விட பெருந்தொகை பணத்தை ராஜபக்சவினர் கொள்ளையிட்டுள்ளனர். இந்த பணம் ராஜபக்சவினருக்கு சார்பாக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு செலவிடப்படுகிறது.
19வது திருத்தச் சட்டம் மாத்திரமல்ல, தேர்தல் முறையில் மாற்றம் செய்வது தொடர்பில் நான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவும் கடமைப்பட்டுள்ளேன் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை எதிர்வரும் 27 ஆம் திகதி 19வது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்ற முடியாது போனால், நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என சந்திப்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளனர்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ள மகிந்த!
[ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 10:05.05 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடொன்றை செய்யவுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் அவருக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு எதிராகவே முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் இம்முறைப்பாட்டை மேற்கொள்ளவுள்ளனர்.
ஜனநாயக முன்னணியினால் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டடுள்ள முறைப்பாடு தொடர்பாக அவரை அழைப்பதில் தோல்வியடைந்தால் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
எனவே இது தொடர்பாக இன்று முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிகளினால் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
முறைப்பாடுகளுக்கு எதிராக முறைப்பாடு செய்த மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று மதியம் இலஞ்ச, ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அவரின் சட்டத்தரணிகள் இன்று ஆணைக்குழுவிற்கு சென்று அவருக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளுக்கு எதிராக முறைப்பாடுகளை செய்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தாலும் ஆணைக்குழு அவருக்கு அழைப்பாணை அனுப்ப முடியாது. இந்த விடயம் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழுத்தங்கள் கொடுக்கும் முயற்சிகள் காணப்படுவதாகவும் வெலிவிட்ட குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் திஸ்ஸ அத்தநாயக்கவை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமித்தமை தொடர்பில் ஆணைக்குழு அண்மையில் முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பாணை விடுத்திருந்தது.
நாடாளுமன்றத்தில் இதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதை அடுத்து அழைப்பாணையை இரத்துச் செய்ய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியிடம் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொள்ள ஆணைக்குழுவின் அதிகாரிகள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

மின்சார நாற்காலிக்கு அஞ்சாதவர்கள், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு செல்ல அஞ்சுகின்றனர்: அலவத்துவல
[ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 10:37.00 AM GMT ]
நாட்டுக்காக மின்சார நாட்காலியில் அமரத் தயார் என சூளுரைத்த நபர் இன்று இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு செல்ல அஞ்சுவதாக வடமேல் மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொடர்பிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். மாகாணசபையின் நேற்றைய அமர்வுகளின் போது முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாக முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்டவர்கள் கோசம் எழுப்பியும், பதாதைகளை காண்பித்தும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதேவேளை எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஆதரித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலுவத்துவல நாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவங்களை மாகாணசபைக்கும் பரப்புதவற்கு முதலமைச்சர் முயற்சிக்கின்றார்.
பல கோடி ரூபா பண மோசடியில் ஈடுபட்ட கள்வர்களை பிடிக்க முயற்சிக்கும் போது இவர்களுக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது.
மின்சார நாற்காலியில் அமர முடியும் என்று தைரியமாக பேசியவர்கள் இன்று இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு செல்ல ஏன் அஞ்சுகின்றார்கள்?
இந்த விடயத்தை பிடித்துக்கொண்டு மாகாணசபையை நாடக சபாவாக மாற்ற முதலமைச்சர் உள்ளிட்டவர்கள் முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyERWSUjs5I.html

Geen opmerkingen:

Een reactie posten