தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 15 april 2015

அதிரடி அறிவிப்பு :இலங்கையில் விசாரணை நடத்த சர்வதேச பொலிஸாருக்கு அனுமதி !

இலங்கைக்கு வந்து விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாக சர்வதேச பொலிஸ் படையான இன்டர்போலின் (interpol) அதிகாரிகளுக்கு இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. த இன்டர்நெசனல் கிரிமினல் பொலிஸ் ஓகனைசேசன் என்ற இன்டர்போல், நாடுகளுக்குள் சென்று விசாரணைகளை நடத்துவதற்கு விசேட பயண அனுமதிகளை தமது அதிகாரிகளுக்கு வழங்குகிறது. இதன்மூலம் இன்டர்போல் அதிகாரிகள் அவசரமாக வீசாக்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது.
தற்போது ஆசிய நாடுகளில் மலேசியா, மாலைதீவு, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், லாவோஸ், பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் உட்பட்ட 72 நாடுகள் இன்டர்போலின் விசேட பயண அனுமதிகளை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்தநிலையில் இன்டர்போல் விடுத்த கோரிக்கைக்கு இணங்கவே இலங்கையின் அமைச்சரவை பயண அனுமதிக்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten