[ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 03:58.03 AM GMT ]
எனினும் பத்தொன்பதாவது திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றுவதில் குழப்பங்களை உண்டு பண்ணுவதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பது மகிந்த தரப்பின் நிலைப்பாடு.
இந்த இழுபறியில் தேசிய அரசு என்பது கலைபட்டுப்போகும் வாய்ப்புள்ளது. பாராளுமன்றத்தில் பத்தொன்பதாவது திருத்தச் சட்டமூலம் நிறைவேறினால் என்ன? நிறைவேற்றப்படாமல் போனால் என்ன? பாராளுமன்றம் கலைக்கப்படுவது உறுதி.
எனினும் பத்தொன்பதாவது திருத்தச்சட்ட மூலம் நிறை வேற்றப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் நடக்குமாயின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பவை பழையபடி கடும் போட்டியை எதிர்கொள்ளும்.
அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி என்ற அமைப்புக்குள் மைத்திரி எதிர் மகிந்த என்ற பிரிபாடல் நிலைமை தணிகை பெறும் வாய்ப்பும் உள்ளது.
ஆனால் பத்தொன்பதாவது திருத்தச்சட்ட மூலம் பாராளுமன்றத்தில் தோல்வியைச் சந்திக்குமாயின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர் ஐக்கிய தேசியக் கட்சி என்பதை விட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மைத்திரி அணி எதிர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகிந்த அணி என்ற மோதல் உச்சம் பெற வாய்ப்புண்டு.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரை ஜனாதிபதி மைத்திரி ஒரு சுமுகமான அரசாட்சியை செய்துவிடக்கூடாது என்பதில் உறுதியாகவுள்ளார். இதனை அவர் வெளிப்படையாகக் கூறத் தவறினாலும் உள்ளூர தனது ஆதரவாளர்களூடாக தனது நோக்கை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் பத்தொன்பதாவது திருத்தச்சட்ட மூலத்தை நிறைவேற்றுவது என்பது ஜனாதிபதி மைத்திரிக்கு இருக்கக்கூடிய பெரும் சவாலாகும்.
பத்தொன்பதாவது திருத்தச்சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தரமறுத்தால் அடுத்த பொதுத் தேர்தலில் அவர்கள் வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள் என ஜனாதிபதி மைத்திரி கூறியுள்ளார்.
இதுகாறும் இப்படியொரு எச்சரிக்கையை ஜனாதிபதி மைத்திரி இதுவரையில் வெளியிடவில்லை. திறைசேரிப் பத்திரங்கள் மூலமாக நிதி திரட்டுதல் என்ற தீர்மானம் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதால் மைத்திரி கடும் கோபம் கொண்டுள்ளார்.
ஆக, இனிமேலும் இப்படியொரு தோல்வியை பாராளுமன்றம் சந்திக்கக் கூடாது. ஆகையால் பத்தொன்பதாவது திருத்தச்சட்ட மூலத்தை நிறைவேற்ற ஆதரவு தர மறுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என்ற எச்சரிக்கையை ஜனாதிபதி மைத்திரி விடுத்துள்ளார்.
மைத்திரி விடுத்த எச்சரிக்கை காலச் சூழ்நிலையில் தேவையானதாயினும் பத்தொன்பதாவது திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறாத போது நடைபெறப்போகும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உடைவுறும் வாய்ப்புள்ளது.
அதாவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மைத்திரி அணி - மகிந்த அணி என இரண்டு அணிகள் ஒரு கட்சியில் இருந்து களம் இறங்கும். இத்தகையதொரு சந்தர்ப்பத்தில் மகிந்த அணிக்கே அதிக ஆசனம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஏனெனில் ஜனாதிபதித் தேர்தல் என்பதும் பொதுத் தேர்தல் என்பதும் வேறுபட்டவை. ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு மைத்திரிக்கு இருந்தது. ஆனால் பொதுத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் தனித் தனியாகப் பொதுத் தேர்தலில் போட்டியிடும்.
இச்சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது இரு அணிகளாக பிரிந்து போட்டியிடுமாயின் மைத்திரியின் அணி பலவீனப்படக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது.
எனவே ஜனாதிபதி மைத்திரியின் எச்சரிக்கை என்பது பேச்சளவில் இருக்க முடியுமே தவிர நடைமுறையில் அதனை நிறைவேற்ற முற்பட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உடைவுறுவது தவிர்க்க முடியாததாகும்.
எதுவாயினும் பத்தொன்பதாவது திருத்தச் சட்ட மூலம் நிறைவேறக் கூடிய இறுதிச்சந்தர்ப்பம் இதுவென்பதால் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக பத்தொன்பதாவது திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றுவதே சாத்தியமானதாக இருக்கும்.
http://www.tamilwin.com/show-RUmtyESZSUkx4F.html
அதிகாரங்கள் வருவதாகக் கூறிய கூட்டமைப்பு! அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்படுவதாகக் கூறுகிறது! டக்ளஸ் குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 05:32.24 AM GMT ]
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
தாங்கள் ஆதரவளித்த புதிய அரசுடனான தேனிலவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முடித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். இது வழமையாக அவர்கள் செய்து வரும் கபட நாடகமாகும்.
தமக்கு வாக்களித்த மக்களது பிரச்சினைகளைத் தீர்க்காமல், அவற்றைத் தொடர வைப்பதன் ஊடாக தங்களது சுயலாப அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் கூட்டமைப்பினர், அவர்கள் ஆதரவளித்த புதிய அரசுக்கு எதிரான பிரசாரங்களில் தற்போது ஈடுபட்டு வருவதானது, அடுத்த தேர்தலுக்கு அவர்கள் தயாராகின்றார்கள் என்பதையே காட்டுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற வடக்கு கல்வியியலாளர்களுடனான சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், தேர்தல் காலங்களில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, வாக்குகளை அபகரித்துக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அதில் எந்தவொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்ற நேர்மையாகவும், உண்மையாகவும் செயற்படாமல், அப்பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக்கி, மீண்டும் அடுத்த தேர்தலுக்கான மூலதனமாக அதே பிரச்சினைகளை மக்கள் முன் கொண்டு செல்வதையே வழக்கமாக்கிக்கொண்டுள்ளனர்.
கடந்த மாதம் 30ம் திகதி வடக்கு மாகாண பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், உரிமைகள், அதிகாரங்கள் எம்மை நோக்கி வருகின்றன எனக் கூறி, இரண்டு நாட்களுக்குள் அதாவது, இம்மாதம் 01ம் திகதி ஐ. நாவின் விசேட அறிக்கையாளர் பாப்லோ டி கிரீவ் உடனான சந்திப்பின் போது, மாகாண அரசின் அதிகாரங்களை மத்திய அரசு கட்டுப்படுத்தும் விதத்தில் செயற்படுவதாகக் குற்றஞ் சாட்டியுள்ளார்.
இப்படியே நாளுக்கு நாள் முரண்பாடான வகையில் கருத்துக்களைப் பரப்பிக்கொண்டே தங்களது காலத்தைக் கடத்துவதைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செய்துவருகின்றனர். இதுதான் அவர்களது வரலாறு என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyESZSUkx5D.html
Geen opmerkingen:
Een reactie posten