தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 27 april 2015

நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான வழக்கின் இறுதித் தீர்ப்பு!



சொந்த மண்ணில் குடியேற வேண்டும்! தீபம் ஏற்றி வழிபட்ட சம்பூர் மக்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 04:21.45 PM GMT ]
தாங்கள் விரைவாக சொந்த இடங்களில் மீள்குடியேற வேண்டும் என்று தீபங்களை ஏற்றி விசேட வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்கள் சம்பூர் பிரதேச மக்கள்.
சம்பூர் பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 9வது ஆண்டை நிறைவு செய்கின்றார்கள். இந்நிலையிலேயே தாம் சொந்த நிலத்தில் குடியேற வேண்டும் என் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதி அவ்வேளை இராணுவ தளபதியாகவிருந்த ஜெனரல் சரத் பொன்சேகா கொழும்பில் விடுதலைப்புலிகளின் தற்கொலை தாக்குதலுக்குள்ளானார்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக அன்றிரவு கிழக்கு மகாணத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டிலிருந்த சம்பூர் பிரதேசத்தில் விமான தாக்குதல்கள் இடம் பெற்றிருந்தன.
இதனையடுத்து மறுநாள் சம்பூர் பிரதேச மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
நாட்டில் தற்போது யுத்தம் முடிவடைந்து 6 வருடங்களாகி விட்ட போதிலும் சம்பூர் பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது.
அந்த பிரதேச மக்களின் குடியிருப்பு காணிகளும், வயல் நிலங்களும் அரச முதலீட்டு ஊக்குவிப்பு வலயம், கடற்படை உயர் பாதுகாப்பு பிரதேசம் மற்றும் இந்திய அனல் மின் உற்பத்தி நிலையம் என கடந்த அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் அடையாளமிடப்பட்டு விஷேட வர்த்தமானி பிரகடனம் மூலம் சுவீகரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சொந்த நிலத்தில் மீள்குடியேற்றம் தடைப்பட்டுள்ள நிலையில் அந்த பிரதேச மக்கள் தொடர்ந்தும் தற்காலிக இடைத்தங்கல் மையங்களில் தங்கியுள்ளார்கள்.
புதிய அரசாங்கம் பதவியேற்ற நிலையில் குறித்த காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.
முதல் தொகுதியில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு என அடையாளமிடப்பட்ட 818 ஏக்கர் விடுவிக்கப்பட்டு அந்த பகுதியில் இந்த மாதம் நிறைவடைய முன்பு மீள்குடியேற்றம் நடைபெறும் என மீள்குடியெற்ற அமைச்சினால் உறுதிமொழியும் உத்தரவாதமும் அளிக்கப்பட்டு ஒரு மாதமாகிவிட்ட போதிலும் இதுவரை மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயெ அவர்கள் தற்பொழுது தற்காலிகமாக தங்கியுள்ள கிளிவெட்டி , கட்டப்பறிச்சான் உட்பட இடைத்தங்கல் முகாம்களுக்கு முன்பாக தீபங்களை ஏற்றி வழிபட்டனர். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் குமாரசாமி நாகேஸ்வரனும் கலந்து கொண்டார்.


நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான வழக்கின் இறுதித் தீர்ப்பு!
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015, 12:05.35 AM GMT ]
நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான வழக்கின் உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு எதிர்வரும் வியாழக்கிழமை (30-04-2015), மதியம் 13.30 மணிக்கு. 'டென் காக்' உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
நெதர்லாந்தில் முக்கிய ஐந்து தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான வழக்கானது 'டென் காக்' உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.
இவ்வழக்கில், நெதர்லாந்தின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர், தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் நெதர்லாந்துக் கிளைப் பொறுப்பாளர் என்பதை தெரிவித்திருந்தார்.
மேலும், 
ஈழத்தில் தமீழீழ விடுதலைப் புலிகளினால் நடாத்தப்பட்டது பயங்கரவாதம் இல்லை, 
அது சிங்கள அரசின் அடக்குமுறைக்குள்ளும் இனஅழிப்புக்குள்ளும் வாழ்ந்த ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான விடுதலைப் போராட்டம், 
தமிழீழ விடுதலைப் புலிகள் விடுதலைப் போராளிகள்,
விடுதலைப் புலிகளை ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத தடைப் பட்டியலில் இட்டது தவறு,
நெதர்லாந்தில் தமிழ் மக்களிடத்தில் சேர்க்கப்பட்ட நிதியின் பெரும்பகுதி விடுதலைப் போராட்டத்திற்கே சேர்க்கப்பட்டது,
என்று மக்கள் முன்னிலையில் திறந்த நீதிமன்றத்தில் வெளிப்படையாக நடந்த தனது விசாரணையில் முக்கியமாக தெரிவித்து பல ஆதாரங்களையும் நீதிமன்றில் கொடுத்திருந்தார்.
அத்துடன், சிறுவர் போராளிகள் விடயமாக விடுதலைப் புலிகள் அமைப்பானது யுனிசெப்புடன் இணைந்து முழுஒத்துழைப்பும் செய்திருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்களையும் செய்திகளையும் மேலும், அண்மையில் வடமாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட இனஅழிப்பு தீர்மானத்தையும் நீதிபதிகளிடம் 16.04.2015  அன்று நடந்த இறுதி அமர்வில் சமர்ப்பித்திருந்தார்.
இதனால், இந்நீதிமன்றத்தின் தீர்ப்பில் என்ன நடைபெறப் போகிறது என்பது பலரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள், சர்வதேச குற்றவியல் நீதிபதிகள் என்பதால், இத் தீர்ப்பானது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சர்வதேச நாடுகளில் இனிமேல் நடைபெறப் போகும் வழக்குகளில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.
இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பானது எதிர்வரும்  வியாழக்கிழமை (30.04.2015) மதியம் 13.30 மணிக்கு 'டென் காக்' உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது மக்கள் மற்றும் செய்தியாளர்கள் சமுகமளிக்கலாம்.
நீதிமன்றின் முகவரி:
Prins Clauslaan 60,
2595 AJ Den Haag. (The hague)
http://www.tamilwin.com/show-RUmtyERbSUjwzE.html

Geen opmerkingen:

Een reactie posten