தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 april 2015

ஒன்ராரியோ பழமைவாத கட்சிக்கான தலைவர் தேர்தலில் வாக்களிக்க ஒன்பதாயிரம் தமிழர்கள் தகுதி!



மாணவர்கள் விழுமியங்களை பாதுகாக்கும் போதே சிறந்த வெளியீட்டை காணலாம்: இணைப்பாளர் ஜெயபாலன்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 08:23.41 AM GMT ]
உயர் கல்வியின் பின் வெளியேறும் மாணவர்கள் உயர் நிலைகளுக்கு செல்லும்போது, நல்ல சிந்தனைகள் விதைக்கப்பட்டு நல்ல விழுமியங்கள் பாதுகாக்கப்படுகின்ற நிலைமை உருவாகுமானால் அதனையே நாங்கள் சிறந்த வெளியீடாக பார்க்கின்றோம் என மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பட கல்வி நிறுவகத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஆரையம்பதி, கோவில்குளத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பட கல்வி நிறுவனத்தின் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின் உயர் கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் ஒன்றியம் மற்றும் உயர் கணக்கியல் டிப்ளோமா இரண்டாம் ஆண்டு முழு நேர பாடநெறியை மேற்கொள்ளும் மாணவர்கள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் மூவினங்களையும் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இன்று நேபாள நாட்டில் மிகப்பெரிய பூகம்பம் இடம்பெற்றுள்ளது.
இதில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலிகொள்ளப்பட்டுள்ளது. இந்தவேளையில் அவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். ஒரு அனர்த்தம் வரும்போது ஒரு மதத்துக்கோ,இனத்துக்கோ,ஒரு சமூகத்துக்கோ வருவதில்லை.
இந்த நாட்டில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது யாரும் நான் தமிழன், நான் முஸ்லிம், நான் சிங்களவன், நான் இராணுவம், நான் விடுதலைப்புலி என எண்ணவில்லை. மனிதன் என்ற எண்ணத்தினை தவிர அந்த நிலைமையில் வேறு எதுவும் அங்கு ஏற்படவில்லை.
நாங்கள் இதனை நேரடியாக அனுபவித்தோம். அந்த சுனாமி இடம்பெற்ற வேளையில் உண்மையான அன்பு, காருண்யம், மனிதனுக்கு உதவி செய்ய வேண்டும், எப்படியாவது மனிதனை காப்பாற்றவேண்டும் என்ற எண்ணமே இருந்தது. அந்தவேளையில் எந்தவிதமான கீழான எண்ணங்களையும் காணமுடியாத நிலையே இருந்தது.
அனைவரும் அந்தவேளையில் ஒன்றுபட்டிருந்தார்கள். ஆனால் குறிப்பிட்ட சில நாட்களுக்கு பின்னர் நிவாரணப் பொருட்கள் கொண்டுவரப்பட்ட போது அங்கிருந்தவர்கள் குழுக்களை ஆரம்பித்து நிவாரணத்திற்கு முண்டியடித்த போது அங்கிருந்த மனிதம் மறைந்துசென்றது. இதனை கண்டு நான் மிகவும் கவலையடைந்தேன்.
உண்மையில் நாங்கள் எங்கு பிரச்சினையை உருவாக்கிக் கொள்கின்றோம். எங்கு நாங்கள் மனிதம், கருணைக்கு அப்பாற்பட்டு செயற்படுகின்றோம் என்றால் எங்களுக்கு கஸ்டம் வரும்போது, இன்னுமொருவரை கஸ்டப்படுத்தும் போது மனித உணர்வுகளை விலக்கி நிற்கின்றோம்.
இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்த மாணவர்களிடையே எந்தவித வேறுபாட்டினையும் நான் காணவில்லை. கீழான சிந்தனையையோ வித்தியாசமான போக்கினையோ நான் இங்கு காணவில்லை. அனைத்து மாணவர்களும் மதம் இனத்துக்கு அப்பால் இந்த நிகழ்வினை வெற்றிகரமாக நடாத்தவேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்தார்கள்.
அதன் நோக்கத்திலேயே அவர்கள் ஒன்றுபட்டு செயற்படுகின்றனர். இவ்வாறான ஒற்றுமையே இன்று எமது பிரதேசத்துக்கும் தேவைப்படுகின்றது என்று தெரிவித்தார்.

அநாமதேய தொலைபேசி நபர் குறித்து உரையாடுவதற்கே ஊடகவியலாளர்கள் விசாரணைக்கு அழைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 09:50.07 AM GMT ]
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அநாமதேய நபர் ஒருவர் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு அச்சுறுத்தியமை தொடர்பாக விசாரணை செய்வதற்கே நான்கு ஊடகவியலாளர்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
வவுனியா மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடிதம் மூலம் விசாரணைக்கு அழைத்திருந்தனர். இந் நிலையில் இன்று இவர்கள் கொழும்புக்கு விசாரணை அளிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் போதே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவர்களிடம் அநாமதேய நபரின் தொலைபேசி அழைப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அநாமதேய நபர் ஒருவர், குறித்த தொலைபேசி இலக்கம் ஒன்றிலிருந்து ஊடகவியலாளர்கள், பொதுமக்களைத் தொடர்புகொண்டு உரையாடியமை, அச்சுறுத்தியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த தொலைபேசி இலக்கத்திலிருந்து குறித்த நபர் மன்னார், வவுனியா ஊடகவியலாளர்களையும் தொடர்புகொண்டு பேசியிருந்தார் என்றும், இது குறித்த தரவுகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே ஊடகவியலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
 'பவ்ரல்' தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரோகண ஹெட்டிராய்ச்சி இந்த அநாமதேய அழைப்புக் குறித்து முறைப்பாட்டைப் பதிவு செய்திருந்தார். இந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அந்த நபர் குறித்த விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் திகதி குறித்த ஊடகவியலாளர் நால்வருக்கும் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபர், அவர்களிடம் உரையாடியுள்ளார். எனவே, அந்த நபர் குறித்த தகவல்களை அறியும் பொருட்டே குற்றப் புலனாய்வுப் பிரிவினர், ஊடகவிலாளர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர் என தெரிய வருகின்றது.
தொடர்புடைய செய்தி:

ஒன்ராரியோ பழமைவாத கட்சிக்கான தலைவர் தேர்தலில் வாக்களிக்க ஒன்பதாயிரம் தமிழர்கள் தகுதி!
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 09:58.40 AM GMT ]
ஒன்ராரியோ பழமைவாதக் கட்சிக்கான தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல்களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
 மே 3ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள வாக்களிப்பிற்காக தலைவர்கள் அனல் கக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் பலர் போட்டிக்களத்தில் இருந்தாலும் தற்போது இறுதிக்களத்தில் இருவரே உள்ளனர். கடசியின் உபதலைவரும் தற்போதைய ஒன்ராரியோ பாராளுமன்ற உறுப்பினருமான கிரிஸ்டின் எலியட் அவர்களும் பரி தொகுதி கனடிய பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுனுமே இறுதிப் போட்டியில் உள்ளனர்.
நடைபெறவுள்ள தேர்தல் குறித்து கடசியின் தலைமையகத்துடன் பேசிய போது பின்வரும் தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
மே 3ஆம் திகதி காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணிவரையும், மே 7 ஆம் திகதி பிற்பகல் 3 மணியில் இருந்து இரவு 9 மணிவரையும் கட்சி அங்கத்தவர்கள் தலைவரை தெரிவு செய்வதற்காக வாக்களிக்கலாம்.
வெற்றி பெற்றவர் விபரம் மே 9ஆம் திகதி அறிவிக்கப்படும். 76 ஆயிரம் கட்சி அங்கத்தவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதில் 14 ஆயிரம் தமிழர்களும் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களை போட்டியில் உள்ள இரு தரப்பும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த தலைவர் தேர்தலில் ஆயிரத்திற்கும் குறைவான தமிழர்களே பங்கு பற்றிய நிலையில் தற்போது மொத்த உறுப்பினர்களில் 10 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தமிழர்களாக இருப்பது தமிழர்களின் அரசியல் பலத்தை காட்டுவதாக அமைந்துள்ளதாக கட்சி முக்கியஸ்த்தர் ஒருவர் தெரிவித்தார்.
தமிழர்கள் போன்றே சீக்கிய இனத்தவர்களும் பெருமளவில் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நேற்றைய ரொறன்ரோ ஸ்ரார் பத்திரிகையின் தகவலின் படி பற்றிக் பிரவுன் அவர்களே முன்னிலையில் நிற்பதாகவும், கிறீஸ்ரீன் எலியட் அவர்கள் ஒன்ராறியோ மாகாணத்தின் புரகிரசிவ் கட்சித் தலைமையைத் தாங்கும் தகுதியை இழந்து விட்டார் என்று தெரிவித்துள்ளது.
இதேவேளை குளோப் அன்ட் மெயில் பத்திரிகையானது பற்றிக் பிரவுன் அவர்கள் இந்தியப் பிரதமர் மோடியை தனது தனிப்பட்ட நிகழ்விற்கு அழைத்து வந்தது கிறிஸ்ரீன் எலியட்டிற்கு கொடுத்த பெரிய அடி என்றும், பற்றிக் பிரவுனிற்கான நிதி வழங்குனர்கள் பலர் பற்றிக் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
தொகுதி வாரியாக எவ்வளவு வாக்குகள் அளிக்கப்பட்டாலும் அவை வெறும் 100 வாக்குகளாகவே கணிக்கப்படும். அந்தவகையில் 107 தொகுதிகளுக்குமாக 10700 புள்ளிகள் கிடைக்கும். யாரொருவர் 5351 புள்ளிகளைப் பெறுகின்றாரே அவர் வெற்றி பெற்றவராக கருதப்படுவார்.
ஆகவே வெறும் அங்கத்தவர் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டும் ஒருவர் வெற்றி பெறமுடியாது அவர் அனைத்துத் தொகுதிகளிலும் அங்கத்தவர்களை கணிசமாக கொண்டிருப்பது அவசியம்.
இந்தவகையில் பத்திரிகைக் கணிப்புக்களின் படி பற்றிக் பிரவுனே 7 வீத புள்ளிகளை அதிகமாகப் பெற்று முண்ணனியிலுள்ளார். அத்துடன் தமிழர்கள் சார்ந்து தனது ஆதரவை பற்றிக் பிரவுன் நீண்டகாலமாக வெளிய்படுத்தி வருவதுதான் காரணமாக தமிழர்களைச் சுற்றி தேர்தல்களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyERcSUjx0F.html

Geen opmerkingen:

Een reactie posten