[ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 12:07.48 AM GMT ]
நாட்டில் மோசடி குறைந்துள்ளதால் பத்து வருடங்களின் பின் முதற் தடவையாக வாழ்க்கைச் செலவு குறைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், மோசடிகள் குறித்து விசாரணை நடத்த இடமளிக்கப் போவதில்லையென எதிர்க்கட்சி கோஷமிடுவதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச லஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பான சர்ச்சை பாராளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது. இதில் கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை நீதியமைச்சரே நியமித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் சபாநாயகர் தனது தீர்ப்பை வெளியிட்டிருக்கிறார்.
ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறங்கிய போது அவரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது.
அவரைக் கொலை செய்வதற்கு புலிகள் முயற்சி செய்தார்கள். மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
மக்களே அவருக்குப் பாதுகாப்பு வழங்கினார்கள்.
எமது அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்சவுக்கும், சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் போதியளவு பாதுகாப்பை வழங்கியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிமார்கள் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்ல.
எந்தவொரு மோசடி குறித்தும் விசாரணை நடத்த இடமளிக்க மாட்டோம் என பந்துல குணவர்த்தன கூறுகின்றார்.
கடந்த காலத்தில் யார் திருட்டில் ஈடுபட்டார்கள். இன்று நாம் விசாரணை நடத்துகையில் அதற்குப் பயந்து சத்தம் போடுகின்றார்கள்.
இந்தப் பாராளுமன்றத்தை திருடர்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தாதீர்கள். திருடர்களைப் பாதுகாக்க திருடர்கள் முன்வந்திருக்கிறார்கள் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyERWSUjs0F.html
பலாலி விமான நிலையம் மீது இந்திய அழுத்தங்கள்!- குணதாச அமரசேகர
[ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 12:16.47 AM GMT ]
இந்திய அழுத்தம் காரணமாக பலாலி விமான நிலையம் சிவில் விமான நிலையமாக மாற்றப்பட உள்ளது.
இவ்வாறு செய்வதனால் வடக்கிற்கு ஓர் விமானப்படை விமான நிலையம் இல்லாமல் போய்விடும். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடக்கு மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட 33000 ஏக்கர் காணியில் கடந்த அரசாங்கம் 26000 ஏக்கர் காணியை உரிமையாளர்களிடம் வழங்கியுள்ளது.
எஞ்சிய காணியில் ஐந்தாயிரம் ஏக்கர் காணி தந்திரோபாய ரீதியாகவும் தேசிய பாதுகாப்பு ரீதியாகவும் மிகவும் முக்கியமானவை. இவ்வாறான ஓர் நிலையில் தற்போதைய அரசாங்கம் காணிகளை மீள அளிப்பதானது பிரிவினைவாதிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதாகவே கருதப்பட வேண்டும்.
இதனை ஓர் துரோகச் செயலாகவே கருத வேண்டும். இந்த அனைத்து நடவடிக்கைகளின் மூலமும் நாட்டை 2002ம் ஆண்டில் இருந்த நிலைமைக்கு மீள கொண்டு செல்ல முயற்சிக்கப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது என குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
பொரளை டீன்ஸ் வீதியில் அமைந்துள்ள அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
வரதராஜப்பெருமாளை கைது செய்ய வேண்டும்!- சிங்கள அமைப்பு
[ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 01:00.04 AM GMT ]
நாட்டின் பிரதான சட்டமான அரசியல் அமைப்பை மீறிச் செயற்பட்டு நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற வரதராஜப்பெருமாளை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும்.
1978ம் ஆண்டு அரசியல் அமைப்பின் 157ம் இலக்க சரத்தின் அடிப்படையில் தனியொரு இராச்சியத்தை அமைத்தல் அல்லது அதற்கு ஆதரவளித்தல் இராஜதுரோகச் செயலாகும்.
1988ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரையில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக கடமையாற்றிய வரதராஜப்பெருமாள் பிரிவினைவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
இதனால் நாடு நீண்ட காலம் போரினால் பாதிக்கப்பட்டது.
வரதராஜப்பெருமாள் தமிழ் இராணுவமொன்றையும் உருவாக்கினார்.
மாகாணசபை முறைமையினால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.
தனி இராச்சிய கோரிக்கை முன்வைத்த வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், நாட்டை விட்டு வெளியேறிச் சென்றிருந்தார்.
தற்போது அவர் நாடு திரும்பியுள்ளதாக ஊடகங்களின் வாயிலாக அறியக் கிடைத்தது.
எனவே வரதராஜப்பெருமாளை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென புத்கல ஜீனவன்ச தேரர் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyERWSUjs0J.html
Geen opmerkingen:
Een reactie posten