[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 05:30.19 AM GMT ]
கடந்த ஆட்சியின் ஊழல் மோசடிகளை மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என்றும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.
தான் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறுவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் ஜே.வி.பி.யின் கருத்தினை வினவிய போதே அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் இந்த பத்து வருட ஆட்சிக் காலத்தில் தேசிய ஒற்றுமையில் பாரிய விரிசல் நிலைமை உருவாகியது. மதக் கலவரங்களும் அடக்குமுறை செயற்பாடுகளுமே மேலோங்கிக்காணப்பட்டன.
சிறுபான்மை மக்கள் மட்டுமின்றி சிங்கள மக்களும் பல சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டனர்.
நிறைவேற்று ஜனாதிபதியின் சர்வாதிகார போக்கின் காரணமாக மக்கள் வெறுக்கும் நபராகவே இன்று மஹிந்த ராஜபக்ச மாறியுள்ளார்.
கடந்த ஆட்சியில் செய்த தவறுகள், பொருளாதார மற்றும் வாழ்வாதார நெருக்கடிகள், அடக்குமுறைகள் என அனைத்தும் மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்துள்ளன.
மஹிந்தவின் அரச குடும்பம் செய்த மோசடிகள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இவ்வாறானதொரு நிலைமை யில் மக்கள் மீண்டும் மஹிந்த ராஜ பக் ஷ மற்றும் அவரது குடும்ப அரசியலுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டார்கள்.
எனினும் மஹிந்தவின் தோளில் பயணித்த ஒரு சிலர் இன்றும் அவரை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர்.
மக்களின் ஆதரவு இல்லாத இவர்கள் தமது அரசியலை தொடர்ந்தும் கொண்டு செல்லவே இவ்வாறாக முயற்சிக்கின்றனர். அதற்கும் மக்கள் இனிமேல் இடம்கொடுக்க மாட்டார்கள்.
எனவே மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அரசியலுக்கு வந்து அதிகாரங்களை கைப்பற்றும் முயற்சி இனியொரு போதும் நடக்கப் போவதில்லை. முடிந்தால் மஹிந்த ராஜபக்ச அடுத்த தேர்தலில் போட்டியிட்டு வென்று காட்டட்டும் என்றார்.
எல்லை தாண்டும் மீனவர்களை சுட அதிகாரம் உண்டு: சுவாமிநாதன்
[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 05:49.24 AM GMT ]
இந்தியாவிலுள்ள தமிழ் அகதிகள் இன்னும் ஒரு வருடத்திற்குள் தாய்நாட்டிற்கு அழைத்து கொள்ளப்படுவார்கள் என மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மீட்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவித்த அமைச்சர்,
குறித்த நிலம் மீட்கப்பட்டதன் பின்னர் உரிய வசதிகள் செய்த பின் இந்தியாவிலுள்ள இலங்கை தமிழர்கள் மீள அழைத்துக்கொள்ளப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வசிக்கும் தமிழர்களை இலங்கை அரசு தனியாக பிரித்து பார்க்கவில்லை எனவும், வடக்கு மாகாணத்தில் 90 சதவீத கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்ட நிலையில் எஞ்சிய 10சதவீத கண்ணிவெடிகள் விரைவில் அகற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை இருநாட்டு மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முழுப்பொறுப்பு இந்தியாவிடமே காணப்படுகின்றது என அமைச்சர் குறிப்பிட்டார்.
பிறநாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதியில் நுழைந்தால் அவர்களை சுடுவதற்கு இலங்கை சட்டத்தில் அதிகாரம் காணப்படுகின்றது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyERdSUjx6A.html
Geen opmerkingen:
Een reactie posten