[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 06:16.44 PM GMT ]
19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபின் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் நாடாளுமன்றத்தில் 19வது அரசியலமைப்பு திருத்த யோசனையின் மூன்றாம் வாசிப்பு மூன்றில் இரண்டு என்ற 211 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது
19வது அரசியல் அமைப்பு திருத்தச்சட்டமூலம் மூன்றாம் வாசிப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 06:02.43 PM GMT ]
திருத்த சட்டமூலத்தின் மொத்தமுள்ள 59 சரத்துக்களும் வாசிக்கப்பட்டு அவற்றில் எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டன
இந்தநிலையில் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இலங்கை நேரப்படி இன்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற வேளையில் ஆதரவாக 212 வாக்குகள் கிடைத்தன
எதிராக ஒரு வாக்கு செலுத்தப்பட்டது. ஒருவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. வாக்களிப்பின்போது 10பேர் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
இன்றுமாலையில் செயற்பட்டது போலவே நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார வாக்கப்பில் பங்கேற்கவில்லை. சரத் வீரசேகர எதிராக வாக்களித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான பெசில் ராஜபக்ச, அப்பாத்துரை விநாயக மூர்த்தி, கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
ஏற்கனவே சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று இரவு 7 மணியளவில் 214 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது
http://www.tamilwin.com/show-RUmtyERcSUjx3C.html
Geen opmerkingen:
Een reactie posten