தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 16 april 2015

இலங்கைப் படையினரால் தமிழ்ப்பெண்கள் மீது பாலியல் வன்முறை!- விசாரணை நடத்துமாறு புதிய அரசிடம் பான் கீ மூன் கோரிக்கை



போர் இடம்பெற்ற காலத்திலும் போருக்கு பின்னரும் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடத்தவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் பாதுகாப்பு சபைக்கு அளித்துள்ள அறிக்கையில் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரை கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் மீள்குடியேற்றம் உட்பட்ட பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
எனினும் இலங்கையின் அரச  படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறை குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை முன்னெடுக்க தவறியுள்ளது.
அத்துடன் போருக்கு பின்னரான ஐந்து ஆண்டுக் காலப்பகுதியில் கடத்தல்கள், தடுத்து வைத்தல், பாலியல் துஸ்பிரயோகம், பாலியல் வன்முறைகள் என்பன அதிகரித்திருந்தன.
இராணுவமயத் திட்டத்தின்கீழ் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதிப் போர்க் காலப்பகுதியில் தமிழ் சமூகத்தின் பெண்கள் மீது இலங்கைப் படையினர் பாலியல் வன்முறைகளை மேற்கொண்டனர்.
2014ம் ஆண்டு தடுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பெண்களின் சாட்சியங்கள் இதனை நிரூபிக்கின்றன.
இனவாத அடிப்படையில் இடம்பெற்ற இந்த வன்முறைகள், விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற அடிப்படையில் தமிழ் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டன.
இந்தநிலையில் இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள அரசாங்கம் குறித்த படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மாற்று நடவடிக்கைகளையும் பொருளாதார முன்னேற்றங்களையும், குறிப்பாக போரின் போது கணவர்மாரை இழந்த பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்களுக்கும் உதவிகளை வழங்கவேண்டும் என்று பான் கீ மூன் கோரியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyESaSUjo0G.html

Geen opmerkingen:

Een reactie posten