தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 16 april 2015

19, 20 திருத்தங்கள் நிறைவேறினால் மைத்திரியின் நல்லாட்சி வரலாற்றில் இடம்பிடிக்கும்!

வலி. வடக்கில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதித்த காணியில் வெடிபொருள் கண்டுபிடிப்பு! மக்கள் அச்சம்
[ வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015, 02:07.33 AM GMT ]
யாழ்.வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 11ம் திகதி மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ள வறுத்தலைவிளான் பகுதியில் மக்கள் காணிகளை துப்புரவு செய்து கொண்டிருந்தபோது வெடிபொருள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். அதனால் குறித்த பகுதியில் தொடர்ந்தும் துப்புரவுப் பணிகளை முன்னெடுக்க அச்சமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 11ம் திகதி மேற்படி பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்கள் சொந்த நிலங்களை துப்புரவு செய்து வருகின்றனர்.
மிகப் பெரியளவில் மரங்கள் வளர்ந்து மக்களுடைய குடியிருப்பு பகுதிகள் முழுவதும் காடுகளாக மாறியிருக்கும் நிலையில் மக்கள் தங்கள் காணிகளை துப்புரவு செய்து வருகின்றனர்.
இதேபோன்று வறுத்தலைவிளான் பகுதியிலும் மக்கள் தங்கள் காணிகளை துப்புரவு செய்து கொண்டிருந்த நிலையில் காணி ஒன்றிலிருந்து ஷெல் ஒன்றை மக்கள் கண்டுள்ளனர்.
குறித்த ஷெல்லின் அரைவாசிக்கும் மேல் மண்ணில் புதைந்திருக்கும் நிலையில் பிற்பகுதி மண்ணின் மேல் தெரியுமாறு இருக்கின்றது.
இது தொடர்பாக நேற்றைய தினம் மக்கள், வலி,வடக்கு பிரதேச சபையின் தவிசாளருக்கு சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
இதனடிப்படையில் பொறுப்பு வாய்ந்தவர்களிடம் விடயம் தொடர்பாக தெரியப்படுத்துவதாக அவர் மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப் பகுதியில் இவ்வாறான வெடிபொருள் உள்ளமையினால் தமக்கு தொடர்ந்தும் துப்புரவு பணிகளில் ஈடுபடுவதற்கு அச்சமாக உள்ளதாக, தெரிவித்திருக்கும் மக்கள் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.


19, 20 திருத்தங்கள் நிறைவேறினால் மைத்திரியின் நல்லாட்சி வரலாற்றில் இடம்பிடிக்கும்!
[ வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015, 12:54.15 AM GMT ]
அரசியலமைப்பின் 19வது திருத்தப் பிரேரணைக்கு மேலதிக தேர்தல் முறையை மற்றும் 20வது திருத்தம் மேற்கொள்ளப்படுமானால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் ஆட்சி இலங்கை வரலாற்றில் முக்கியமாகப் பதிவாகுமென பாராளுமன்ற உறுப்பினர் டியூ குணசேகரா கூறியுள்ளார்.
இந்தப் பிரேரணை ஏப்ரல் 20, 21ம் திகதிகளில் விவாதத்துக்கு வரவுள்ளது. 100 நாள் திட்டத்தில் இது தீர்க்கமான வாக்குறுதிகளாகும்.
இது நிறைவேற்றப்படுமானால் ஒரு வரலாற்று திருப்பமான மாற்றமாக அமையும் என்றும் அவர் தொடர்ந்து தெரிவித்தார்.
19வது திருத்தத்துக்கு இருபிரதான அரசியற் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியதில்லை. இரு கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் இது சேர்க்கப்பட்டுள்ளது.
இதனை 6.2 மில்லியன், 5.7 மில்லியன் மக்கள் அங்கீகரித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
தேர்தல் முறையில் மாற்றம் தேவை. அவ்வாறின்றி தேர்தல் முறையை மாற்றாமல் 19வது திருத்தத்தைக் கொண்டுவருவது அர்த்தமற்றது என்று ஐ. ம. சு. முன்னணியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரைக் கேட்டுள்ளனர்.
எனினும் விரைவில் தேர்தல் முறை மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyESaSUjo0A.html

Geen opmerkingen:

Een reactie posten