கனடாவில் தமிழர்கள் மீது மறைமுகத் தாக்கத்தை விளைவிக்கக்கூடியதாக ஏற்படுத்தப்பட்ட நிறவாதப் பிரச்சாரத்தை மிகவும் சாதுரியமாகத் கனடா வாழ்த் தமிழர்கள் முறியடித்தனர்.
தமிழர்கள் ரொறன்ரோவின் பெரும்பாகத்தில் தான் வாழ்கிறார்கள். அவர்களது 12 ஆயிரம் அங்கத்துவமும் ஒரு சிறுபகுதியை மையப்படுத்தியே உள்வாங்கப்பட்டது என ஒன்றாரியோ புரோக்கிரசிவ் கண்சவேட்டிவ் கட்சிக்கான தலைவர் தேர்தலில் பிரச்சாரமொன்று மேற்கொள்ளப்பட்டது.
காலாகாலத்திற்கு தமிழர்கள் மீதான இவ்வாறான துணிந்த குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது மற்றைய இனங்கள் மறைமுக எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கான துணையாக இருந்து வந்தன. எனினும் இந்த முறை மேற்கொள்ளப்பட்ட இப் பிரச்சாரத்தை தமிழர்கள் தரவுகளுடன் முறியடித்தனர்.
கனடிய மனிதவுரிமை மையத்தின் தலைமையின் கீழ் பற்றிக் பிரவுனிற்கான தமிழர்கள் பிரச்சாரப்படுத்தி இணைந்து கொண்ட 12 ஆயிரம் அங்கத்தவர்கள் 86 தொகுதிகளில் இருந்து பதிவாகியிருக்கிறார்கள் என்பதும் அவர்களில் 10 வீதத் தமிழர்கள் பிரெஞ்சு மொழித் திறமையுள்ளவர்கள் என்பதையும் நிரூபித்ததுடன்,
அங்கத்துவர்களாக இணைவதற்கான பிரச்சாரத்தில் தமிழர்கள் மத்தியில் விளையாட்டுக் கழகங்கள், கலைக் கல்லூரிகள், சமூக அமைப்புக்கள் என 56 நிறுவனங்கள் ஈடுபட்டதும் வெளிக் கொணரப்பட்டு சமூகவலைத் தளங்களினூடாக மேற்கொள்ளப்பட்ட காழ்ப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரங்களிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
Geen opmerkingen:
Een reactie posten