[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 10:10.40 AM GMT ]
தற்போது நாட்டில் எங்களுடைய அரசாங்கமே ஆட்சி நடத்துகின்றது. பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எனினும் இந்த வழக்கு எதிர்வரும் 22ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலன்னாவ தொகுதி அமைப்பாளர் பதவியை வழங்கினால் ஏற்றுக்கொள்வேன் என ஹிருனிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரன் தொடர்பான வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நான் குற்றமற்றவர் எனக் கூறினேன்!- துமிந்த
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 10:16.54 AM GMT ]
பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் படுகொலைச் சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் பங்கேற்ற போது அவர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பேன்.
சேறு பூசல்களுக்கு பின்வாங்கப் போவதில்லை.
நான் குற்றமற்றவர் என்பதனையே சொல்ல விரும்புகின்றேன்.
எனக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டு சுமத்தி பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன.
இவ்வாறான சேறு பூசல்களைக் கண்டு நான் அஞ்சப் போவதில்லை என துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டதாக பந்துல தெரிவிப்பு: ஆராய்வதாக ரணில் பதில்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 10:29.15 AM GMT ]
அண்மையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முன்பாக மக்கள் ஒன்றுகூடியபோது, தாம் அங்கு சென்றமைக்காக தம்மை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டமை சிறப்புரிமை மீறலாகுமென தெரிவித்தார்.
அத்துடன், மக்கள் ஒன்றுகூடும் இடத்திற்கு செல்லும் உரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில், இவ்விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தான் ஆராய்வதாக குறிப்பிட்டார்.
கடந்த 23ம் திகதி கோத்தபாய ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு உத்தரவிட்டபோது, ஆணைக்குழுவிற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவையும் மீறி குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட குற்றத்திற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 26 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyERcSUjx0J.html
டயகம வைத்தியசாலையில் சிரமம்: அரசாங்கம் ஏமாற்றுகின்றதா? மக்கள் கேள்வி
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 10:53.27 AM GMT ]
இவ்வைத்தியசாலை தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கிவந்தது 1992 ம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கம் மயமாக்கப்பட்டது. தற்போது இவ்வைத்தியசாலையில் அதிகமான குறைபாடுகள் நிலவுகின்றது. இப்பகுதியில் உள்ள 30 தோட்டங்களை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மக்கள் இவ்வைத்தியசாலையை பயன் படுத்துகின்றனர்.
இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே கடமையில் இருப்பதால் சிகிச்சை பெற செல்லும் நோயாளர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தொடர்கின்றது.
வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு கட்டில் விரிப்பு இல்லை அத்தோடு இரவு வேளையில் நுளம்பு தொல்லையால் நிம்மதியாக நித்திரை கொள்ள முடியாத சூழ் நிலை காணப்படுவதாக வைத்தியசாலையில் தங்கியுள்ள நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை வைத்தியசாலையில் மிகவும் குறைந்த ஊழியர்கள் சேவையில் இருப்பதால் உரிய நேரத்தில் சேவைகள் நடைபெறுவதில்லையென தெரியவருகின்றது. மேலும் இங்குள்ள பிரேத அறை 4 அடி அகலமும் 6 அடி நீளம் கொண்டதாகும் இதனால் இறப்பவர்களின் உடலை வைக்கமுடியாத நிலை காணப்படுவதோடு ஒருவர் அல்லது இருவர் இறக்கும் போது உடலை வைப்பதில் சிரமங்கள் இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.
அத்தோடு வெளி நோயாளர் பிரிவில் மருந்து கொடுக்கும் அதிகாரி ஒருவர் கடந்த ஆறுமாதகாலமாக இன்மையால் பெரும் சிரமம் தோன்றியுள்ளது. கடந்த திங்கட்கிழமை இப்பகுதியில் உள்ள 200ற்கும் மேற்ப்பட்ட மக்கள் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தனர். வைத்திய அதிகாரியால் அனைத்து நோயாளர்களும் பரிசோதனை செய்யப்பட்டனர்.
இருப்பினும் நோயாளர்களுக்கு மருந்துகள் வழங்கப்படவில்லை காரணம் மருந்துகள் வழங்கும் அதிகாரி இல்லை. இதனால் வைத்தியசாலை நிர்வாகத்தால் பாமசியில் மருந்துகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்தனர்.
இதனால் காலையிலிருந்து பிற்பகல் ஒரு மணிவரை நோயாளர்கள் வேதனையுடன் காத்திருந்ததுடன் சிலர் நோயை தாங்கிக் கொள்ளமுடியாமல் மயங்கிகிடந்தனர். இன்னும் சிலர் பசியுடன் இருந்ததுடன் போக்குவரத்துக்கு பணம் இல்லாமல் தடுமாறி நின்றனர். அத்தோடு பணம் இல்லாமல் கடைகளில் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாமல் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு திரும்பி சென்றனர்.
வைத்தியசாலையை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படாத காரணத்தினால் இரவு நேரங்களில் நாய்களின் தொல்லையினால் நோயாளர்கள் சிரமப்படுகின்றனர். இங்கு காணப்படும் குறைபாடுகளை தொடர்பாக இப்பிரதேச மக்கள் சிலர் கருத்து தெரிவிக்கையில்
திரு. சன்முகநாதன்
இவ்வைத்தியசாலையில் பல குறைபாடுகள் தொடர்ச்சியாக இருக்கின்றது. நாங்கள் தோட்டத்தில் தான் வேலை செய்கின்றோம் வருமானம் மிகவும் குறைவு இலவசமாக சிகிச்சை பெறலாம் என நினைத்து வைத்தியசாலைக்கு சென்றால் வைத்தியர்கள் தனியார் கடைகளில் மருந்துகளை பெற்றுக்கொள்ளுமாறு துண்டு வழங்குகின்றார்கள்.
வறுமை காரணமாக தான் அரச மருத்துவசாலைக்கு செல்கின்றோம் இங்கும் இப்படி செய்தால் எங்களால் என்ன செய்ய முடியும் அரசாங்கம் எங்களை ஏமாற்றுகின்றதா ? வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக மலையக அரசியல்வாதிகளிடம் கடிதம் மூலம் பல முறை கடிதம் கொடுத்த போதிலும் இதுவரை எந்த அரசியல்வாதிகளும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனைக்குரிய விடயம்.
திரு. இராமகிருஸ்ணன்
அரசாங்கத்தால் இலவசமாக மருத்துவ சேவை வழங்குவதாக கூறுவது பொய்யான விடயம் வைத்தியசாலையை நம்பி சென்றால் சாவுதான் வைத்தியர் பரிசோதனை செய்தாலும் மருந்து கொடுப்பதுக்கு அதிகாரிகள் இல்லை வேறு வைத்தியசாலைக்கு செல்வதாக இருந்தால் போக்குவரத்து வசதி இல்லை. வைத்தியர் ஒருவர் மாத்திரமே உள்ளார் அத்தோடு மருந்துகள் இருக்கின்ற போதிலும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது வைத்திய அதிகாரியால் பாமசியில் மருந்துகளை பெற்றுக்கொள்ளுமாறு துண்டுகள் வழங்குகின்றார்கள் வசதி இருப்பவர்கள் வாங்கமுடியும் வசதி இல்லாதவர்கள் என்ன பண்ணுவது தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு வந்த தலைவர்கள் எங்களின் குறைபாடுகளை கண்டுகொள்வதில்லை. அத்தோடு சில தலைவர்கள் குறைபாடுகளை எங்களிடம் கேட்பதோடு குறைகளை நிவர்த்தி செய்யாமல் நழுவி செல்கின்றனர். எனவே இவ்வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திரு. ராஜேந்திரன் தெரிவிக்கையில்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சேமநலன் கருதி தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் தொழிலாளர்களின் நன்மையை கருத்திற்கொண்டு செயல்ப்பட்டது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சேமநலன் கருதி தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் தொழிலாளர்களின் நன்மையை கருத்திற்கொண்டு செயல்ப்பட்டது.
ஆனால் தற்போது இவர்களின் சுய இலாபத்தினை மட்டுமே கருத்திற்கொண்டு செயல்ப்பட்டு வருவது வேதனைக்குரிய விடயம் அத்தோடு இவ்வாறான சூழ்நிலை காரணமாக தொழிற்சங்கங்களின் பலமும் குறைவடைந்து வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையை கருத்திற்கொண்டு செயற்படுவது இன்றைய கட்டாயமாகும்.
http://www.tamilwin.com/show-RUmtyERcSUjx1A.html
Geen opmerkingen:
Een reactie posten