[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 07:27.54 AM GMT ]
அன்ட்ரூஷான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகிய இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகள் உட்பட இதர நாடுகளை சேர்ந்த 8 பேரை துப்பாக்கியால் சுட்டு இந்தோனேஷிய அரசாங்கம் துஷாக்காம்பாங்கான் சிறையில் இன்று அதிகாலை மரண தண்டனையை நிறைவேற்றியது.
அதேவேளை தனது நாட்டு பிரஜையான ரொட்ரிகோ குல்ஹரேட் என்பருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறித்து பிரேசில் அரசாங்கம் கடும் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிலிப்பைன்ஸ் பெண்ணுக்கு தண்டனை நிறைவேற்றுவது இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
மேரி ஜேன் பிஸ்டா வெல்ஹேசோ என்ற பெண் சார்பில் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இறுதி கோரிக்கையை விடுத்ததை அடுத்து அந்த பெண்ணின் தண்டனையை இந்தோனேசிய அரசாங்கம் ஒத்திவைத்துள்ளது.
இந்த பெண் குற்றமற்றவர் எனவும் அவரை தாம் கருவியாக பயன்படுத்தியதாக கூறி பிலிப்பைன்ஸ் நபர் ஒருவர் சரணடைந்துள்ளார். இதன் காரணமாகவே அந்த பெண்ணுக்கு தண்டனை நிறைவேற்றுவது ஒத்தவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
2006 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு போதைப் பொருளை கடத்திச் செல்ல முயற்சித்ததாக கூறப்படும் பாலி 9 வலய தலைவர்கள் என அழைக்கப்படும் குழுவை சேர்ந்த அன்ட்ரூஷான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோரை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற அவுஸ்திரேலிய அரசாங்கம் பாரிய ராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
ஷான் மற்றும் சுகுமாரன் ஆகியோர் சிறையில் இருக்கும் போது முற்றாக புனர்வாழ்வு பெற்றிருந்தாக கூறியுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபோட் இவர்கள் கொலை செய்யப்பட்டது அவசியமற்றதும் கொடூரமானதும் என தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷியாவின் இறையாண்மையை நாங்கள் மதிக்கின்றோம். எனினும் நடைபெற்றிருப்பது சாதாரணமாக விடயமல்ல. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக இந்தோனேஷியாவுடனான எமது ராஜதந்திர ஆலோசனைகளை நாங்கள் நிறுத்தியுள்ளோம் எனவும் பிரதமர் டொனி குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேஷியா அவுஸ்திரேலியாவுக்கு ஒரு முக்கியமான நாடு. புகலிட கோரிக்கையாளர்கள் மற்றும் பயங்கரவாத பிரச்சினைகள் தொடர்பில் இரு நாடுகளும் நெருக்கமான பணியாற்றி வருகின்றன.
வெளிநாடு ஒன்றில் தமது பிரஜைகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், முதல் முறையாக அவுஸ்திரேலியா, இந்தோனேஷியாவுக்கான தனது உயர்ஸ்தானிகரை திரும்ப பெற்றுள்ளது.
களத்தின் கடைசி நிமிடத்தில்! இறந்த பின்பும் துடிதுடித்த மயூரன் உட்பட்ட சிலர்!
இந்தோனேஷியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட விடயம் சர்வதேச ஒழுங்கில் பாரிய சர்ச்சையாக மாறியுள்ளது.
தனது பிடியில் இருந்து சற்றும் தளராத இந்தோனேசிய அரசாங்கம் ஈழத்தமிழர் உட்பட எட்டுப் பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றி இருக்கின்றது.
தங்களுக்கு இழைக்கப்பட்ட உச்சமான அநீதியாகவே அவுஸ்திரேலிய மக்கள் இந்த மரண தண்டனையை பார்க்கிறார்கள்.
இந்த மரண தண்டனையின் பின்புலத்தை ஐ.நா எவ்வாறு அணுகப் போகின்றது போன்ற பல தகவல்களை லங்காசிறி வானொலியின் விசேட செவ்வியில் கனடாவிலிருக்கும் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்ணம் பகிர்ந்து கொண்டார்.
Geen opmerkingen:
Een reactie posten