[ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 04:55.20 AM GMT ]
கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் அலரி மாளிகையில் இடம்பெற்றதாக கூறப்படும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் அரச விரோத சத்தித் திட்டத்துக்கு எதிராக சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாக ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ஸ் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
தனியார் வானொலி ஒன்றில் நேற்று ஒலிபரப்பாகிய நிகழ்சியில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேற்படி அரச விரோத சதித் திட்டத்துக்கு எதிராக சாகும்வரையான உண்ணவிரத போராட்டம் நடத்த வேண்டும் என தான் முன்வைத்த ஜோசனைக்கு ஜே.வி.பி போதுமான பெறுமதி்யை வழங்கவில்லை. தான் கட்சியில் இருந்து விலக இதுவும் ஒரு பிரதான காரணம் எனவும் சோமவன்ஸ அமரசிங்க கூறியுள்ளார்.
நாளையுடன் நிறைவடையும் ஜனாதிபதியின் 100 நாட்கள்
[ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 05:24.57 AM GMT ]
இவ்வேலைத்திட்டமானது கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகியதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி பிரமாணம் ஏற்றது இதன் முதற்கட்ட நடவடிக்கையாகும்.
பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டதை தொடர்ந்து புதிய அமைச்சரவை குழுவும் நியமிக்கப்பட்டது.
அதன் கீழ் மக்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு இடைக்கால வரவு செலவு திட்டம் மற்றும் தேசிய ஔடத கொள்ளை உட்பட பல சட்ட மூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரம் ஒழிப்பதற்கான 19ஆம் அரசியலமைப்பு திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலைத்திட்டன் அட்டவணைக்கமைய நாளைய தினம் தற்போதைய பாராளுமன்றத்தை கலைத்து பொறுப்புடைய அரசாங்கத்தின் கீழ் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடாத்தல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அட்டவணைக்கமைய குறித்த பொது தேர்தலில் அதிக ஆசனங்களை வெற்றி பெறும் கட்சிக்கு பிரதமர் பதவியும் அதற்கு அடுத்தபடியான ஆசனங்களை வெற்றி பெறும் கட்சிக்கு துணைப்பிரதமர் பதிவியும் வழங்கப்பட்டு அனைத்து கட்சி பிரதிநிதிகள் கொண்ட அரசாங்கத்தை அமைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்களித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyERWSUjs2I.html
Geen opmerkingen:
Een reactie posten