[ செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2015, 06:13.53 AM GMT ]
இந்த விடயத்தில் பொலிஸாரின் கடும் நடவடிக்கையானது ஊடகத்தை அடக்கும் வகையில் அமைந்துள்ளதாக அந்த சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் நாட்டில் ஊடக சுதந்திரத்தை காக்கும் வகையில் அரசாங்கம் இதுகுறித்து விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று செய்தியாளர் சம்மேளனம் கோரியுள்ளது.
பள்ளிச்சிறுமி ஒருவரை பொலிஸார் தாக்கியதாக வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் என்.லோகதயாளன் என்ற செய்தியாளர் கைதுசெய்யப்பட்டார்.
பின்னர் அவரை பொலிஸார் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோரிய போதும் நீதிமன்றம் செய்தியாளரை ஏப்ரல் 9ம் திகதியன்று பிணையில் செல்ல அனுமதித்தது.
எனினும் மே 29ம் திகதி மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்தியாளர் வெளியிட்ட செய்தி உண்மையில்லை என்ற அடிப்படையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தவிர யாழ்ப்பாணத்தின் மூன்று செய்தியாளர்கள் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்ட சம்பவத்தையும் சம்மேளனம் கண்டித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyESYSUkx1C.html
ஐ.நா விசாரணைக்கு இலங்கை ஆதரவு வழங்க வேண்டும்! - பிரி. பிரதமர்
[ செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2015, 09:03.36 AM GMT ]
இலங்கையில் இன்று கொண்டாடப்படும், தமிழ், சிங்களப் புதுவருடத்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவிலும், இலங்கையிலும், உலகின் ஏனைய நாடுகளிலும் இன்று புதுவருடத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மில்லியன் கணக்கான மக்கள் இன்று தமது குடும்பத்தினர், நண்பர்கள், அயலவர்களுடன் இணைந்து புதுவருடத்தைக் கொண்டாடுகின்றனர்.
பிரித்தானியாவில் தமிழ், சிங்கள சமூகங்களின் அற்புதமான பங்களிப்புகளையும் இந்த தருணத்தில் நினைவு கூர வேண்டும்.
இன்று பலர், வெளிநாடுகளில் உள்ள தமது அன்புக்குரியவர்களை நினைத்து, குறிப்பாக இலங்கையில் உள்ளவர்களை நினைத்து புதுவருடத்தைக் கொண்டாடுகின்றனர்.
கடந்தமாதம், இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவை டவுணிங் வீதி இல்லத்தில் சந்தித்த போது, கடந்த கால விவகாரங்களுக்குத் தீர்வு காண அவரது அரசாங்கம் எடுக்கின்ற முயற்சிகளுக்கு எனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளேன்.
ஆனால், இலங்கை அரசாங்கம் ஐ.நா விசாரணைகளுக்கு முழு ஆதரவையும் வழங்க வேண்டும் என்றும், இன்னும் மேலே செல்ல வேண்டும் என்றும் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தேன்.
இந்த புதுவருட கடந்தகால காயங்களை குணப்படுத்துவதற்கு உதவுவதுடன், சமூகங்களுக்கு இடையில் நெருக்கத்தையும் கொண்டு வரும் என்று நம்புகிறேன்.
புதுவருடத்தைக் கொண்டாடும் அனைவருக்கும், மிகவும் மகிழ்ச்சியான, வளம்மிக்க ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyESYSUkx1F.html
வலி.வடக்கில் எஞ்சிய பகுதிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2015, 09:44.28 AM GMT ]
100 நாள் வேலைத் திட்டத்திற்குள் முதற்கட்டமாக 1000 ஏக்கர் காணியை விடுவித்து ஏனையவற்றை தொடர்ந்து விடுவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான புதிய அரசாங்கம் உறுதியளித்திருந்தது
ஆனால் 100 நாள்; வேலைத் திட்டமே நிறைவடையும் நிலையில் வெறுமனே 613 ஏக்கர் மட்டுமே விடுவிக்கப்பட்டிருக்கின்றது என வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழு சுட்டிக்காட்டி கவலை வெளியிட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட பகுதிகளில் எஞ்சியிருந்த ஒரு சில வீடுகளைக் கூட இராணுவத்தினர் அவசர அவசரமாக இடித்தழித்துள்ளனர் என வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுத் தவைவர் ச.சஜீவன் சுட்டிக்காட்டுகிறார்.
நீண்ட காலத்தின் பின்னர் தமது சொந்த இடங்களையும் வீடுகளையும் பார்த்து கவலையடைந்து கண்ணீர் வடிக்கின்றனர்.
எஞ்சியுள்ள படையினர் பயன்படுத்தும் வீடுகளையாவது இடித்தழிக்காமல் மக்களிடம் கையளிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
மேலும் வலி.வடக்கின் மயிலிட்டி, தையிட்டி, காங்கேசன்துறைப் பகுதிகளைச் சேர்ந்த மக்களையும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்ற இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyESYSUkx1H.html
Geen opmerkingen:
Een reactie posten