தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 april 2015

புதிய அரசின் நடவடிக்கைகளில் அதிருப்தி: ரஜீவ விஜேசிங்க

ஸ்ரீ.சு.கவின் பிரதமர் வேட்பாளராக எவரையும் பெயரிடப் போவதில்லை!– சுசில்
[ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015, 04:04.20 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக ஒருவரை பெயரிடப் போவதில்லை என கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பிபிசி  செய்தி சேவையுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் மரபு என்ற வகையில் பிரதமர் வேட்பாளார் ஒருவரை பெயரிடுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் இணைத்துக்கொண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட வேண்டுமென கட்சியின் பெரும்பான்மையானவர்கள் விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதம வேட்பாளராக நியமிக்க எவ்வித தடையும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நால்வரை விரட்டிய ஸ்ரீ.சு.கட்சி அர்ஜூன, ஹிருணிகா உட்பட ஐவரை இணைக்க தீர்மானம்
[ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015, 04:12.41 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து நால்வர் நீக்கப்பட்டதை தொடர்ந்து புதிதாக ஐவரை நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, கொட்டிக்காவத்தை பிரதேச சபை தலைவர் பிரசன்ன சோலங்காரச்சி, கலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க மற்றும் எதிரிவீர வீரவர்த்தன ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் மத்திய செயற்குழுவில் இருந்து பந்துல குணவர்தன, எஸ்.எம்.சந்திரசேன, டீ.பீ.ஏக்கநாயக்க, சாலிந்த திஸாநாயக்க ஆகியோர் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மத்திய செயற்குழுவில் தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நீக்குவதற்காகவே குறித்த ஐவரும் நியமிக்கப்படவுள்ளார்கள்.


மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக சிங்கப்பூரில் வழக்கு
[ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015, 05:08.09 AM GMT ]
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரின் குடிவரவு சட்டங்களை மீறியுள்ளார் என ஊழலுக்கு எதிரான குரல் கொடுக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக சிங்கப்பூரில் வைத்தே வழக்கு தொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரின் குடிவரவு சட்டங்களை மீறியமைக்காக அந்த நாட்டின் நீதிமன்றங்களிலேயே அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை செய்து வருகின்றதாகவும் வசந்த சமரசிங்க கூறியுள்ளார்.
சிங்கப்பூர் சட்டங்களின் படி அந்நாட்டின் பிரஜை ஒருவர் வேறு நாடுகளில் நிரந்தர குடியுரிமை பெறமுடியாது. எனவே அர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை தற்போதைய அரசாங்க அமைச்சர்கள் சிலர் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்
ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்பு தங்களையும் தங்களது குடும்பத்தினரையும் தொந்தரவு செய்வதாக எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.
அத்துடன் இன்று அப்பாவிகளை குற்றம் சுமத்துவது அரசாங்கத்தின் நாகரீகமாக மாறிவிட்டதாக குறித்த உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்பு சுமத்திய குற்றங்கள் அனைத்தும் உண்மை என வழக்கறிஞர்கள் மற்றும் தணிக்கை நிபுணர்கள் குழு நிபுணர்களே இவற்றை உறுதி செய்துள்ளதாகவும் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசின் நடவடிக்கைகளில் அதிருப்தி: ரஜீவ விஜேசிங்க
[ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015, 05:37.46 AM GMT ]
புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் திருப்தி அடைய முடியாது என லிபரல் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை நியமனம் குறித்து ஆரம்பத்தில் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் கடைசியில் அத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையிலேயே  அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையற்ற  வகையில் அமைந்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமல்லாது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுக்கும் பொறுப்பு பொது மக்களுக்கு மாத்திரமே உண்டு என தெரிவித்துள்ளதுடன், ஜனாதிபதியின் அதிகாரங்களை பிரதமருக்கு வழங்குவதற்காக மக்கள் இந்த அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தற்போதைய அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகள் தொடர்பிலும் அதிருப்தி வெளியிட்டுள்ள ரஜீவ விஜேசிங்க,  ஊழல் மோசடிகளுக்கு எதிராக நிலையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyESXSUkw6C.html

Geen opmerkingen:

Een reactie posten