நேபாளத்தில் மீண்டும் புதிதாக நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டரில் 6.7 என்ற அளவில் பதிவாகி உள்ளதால் ஒட்டுமொத்த மக்களும் பீதியில் உறைந்துள்ளனர்.
நேபாளத்தில் உள்ள Kodari என்ற நகரில் சற்று முன்னர் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்பகுதி முழுவதும் பயங்கரமாக அதிர்ந்ததால் வீடுகள் மற்றும் கட்டடங்களிலிருந்து மக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
புதிதாக ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் உயிர் மற்றும் பொருட்சேதாரம் குறித்து எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.
நேற்று காலை நிகழ்ந்த 7.9 அளவு நிலநடுக்கத்தால் சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து, அதன் மீட்பு பணிகள் நடந்துக்கொண்டிருக்கும் வேளையில் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாம் இணைப்பு:
நேபாளத்தில் நேற்றைய நில நடுக்கத்துக்கு பலியானவர்களின் உடல்களை புதைக்கும் அளவுக்கு வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாததால் தகன மேடையில் பிணங்கள் அனைத்தையும் குவியல் குவியலாக போட்டு எரித்துவருகின்றனர்.
http://newsonews.com/view.php?22YOlR2bcg80M34ed4MMa020BnB4dd2fBn5303ogAO2e4C08Y3cbclOoe3
|
Geen opmerkingen:
Een reactie posten