தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 april 2015

எதிர்ப்பு பேரணியின் மீது கண்ணீர் புகை பிரயோகம்

ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லக்கூடிய வாய்ப்பு வழங்கிய 19வது திருத்தம்!
[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 09:09.59 AM GMT ]
ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லக் கூடிய வகையில் நேற்று நிறைவேற்றப்பட்ட 19 வது அரசியலமைப்பு திருத்தத்தில் சட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை குடியுரிமையை பெற்ற இலங்கையர்களுக்கு தேர்தலில் வாக்கு கோருவதற்கு முடியாது என்ற சரத்தும் சேர்க்கப்பட்டுள்ளது.
பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களை வரையறுக்கும் சில சரத்துக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஒருவரின் பதவிகாலம் 5 வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ஒருவருக்கு கிடைத்திருந்த இராஜதந்திர சிறப்புரிமைகளும் 19 வது திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக நீதிமன்றம் செல்லக் கூடிய வாய்ப்பு உள்ளது.
இந்தநிலையில், 18 வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ரத்து செய்யப்பட்ட 17 வது திருத்தமான சுயாதீன ஆணைக்குழு 19 வது திருத்தத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

துறைமுக நகரம் குறித்து விளக்கமளிக்க சட்டமா அதிபருக்கு கால அவகாசம்
[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 09:20.23 AM GMT ]
துறைமுக நகர திட்டம் தொடர்பில் விளக்கமளிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதவான் விஜித் கே மலல்கொட இன்று இந்த கால அவகாசத்தை வழங்கியுள்ளார்.
சுற்றாடல் காரணிகள் குறித்து கவனம் செலுத்தாது இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புக்கள் குற்றம்சுமத்தி வழக்கு தாக்கல் செய்துள்ளன. 
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது துறைமுக நகரம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிப்பதற்கு கால அவகாசம் வழங்குமாறு கோரப்பட்டது.
விளக்கம் அளிக்குமாறு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் காலம் தாழ்த்தி கிடைக்கப்பெற்றதினாலேயே கால அவகாசம் கோரப்பட்டது என சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்திருந்தது.
இந்நிலையிலேயே எதிர்வரும் ஜூன் மாதம் 15ம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.



எதிர்ப்பு பேரணியின் மீது கண்ணீர் புகை பிரயோகம்
[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 09:39.31 AM GMT ]
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை நோக்கி அனைத்து பல்கலைக்கழக பிக்கு முன்னணியினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியின் மீது பொலிஸாரினால் கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டுள்ளது.
மானியங்கள் ஆணைக்குழு அமைந்துள்ள பகுதியிலேயே இன்று பொலிஸாரினால் கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்தில் பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்து கொள்ளப்படும் பிக்கு மாணவர்களின் எண்ணிக்கை அரைவாசிக்கும் குறைவாக காணப்படுகின்றது என தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணியினால் அப்பிரதேசத்தில் பாரிய போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரை பாத யாத்திரை சென்றுள்ளனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குள், பல்கலைக்கழக பிக்கு மாணவர்களால் அத்துமீறி நுழைய முற்பட்ட போதே ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyERdSUioyF.html

Geen opmerkingen:

Een reactie posten