தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 april 2015

வட,கிழக்கு மக்களின் காணி உரிமையை உறுதி செய்ய புதிய சட்டமூலம் விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

100 நாள் திட்டத்தில் விவசாயக் கடனுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை: விவசாயிகள் கவலை
[ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015, 12:11.22 PM GMT ]
அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் மக்களுக்கான சலுகையில், விவசாயக் கடனுக்கு 50 சதவீத சலுகையென உறுதி வழங்கப்பட்டுள்ள போதும் அது இதுவரை நடைமுறையில் இல்லை என வன்னி விவசாயிகள் உட்பட பலர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதுவரைக்கும் நகைக் கடன்கள் தொடர்பாகவோ விவசாயக் கடன் தொடர்பாகவோ எந்தவித மானியங்களும் மக்களுக்கு வழங்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விவசாயக் கடன் மக்களுக்கு 50 வீத சலுகை வழங்குவதாக 100 நாள் வேலைத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட போதிலும் 90 நாள் தாண்டியும் விவசாயக் கடனுக்கான நிவாரணம் எதுவித சலுகையும் வழங்கப்படவில்லை.
இவ்விடயத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு வந்து நூறு நாள் வேலைத்திட்டத்துக்கு அமைவாக கடன்களுக்கு வட்டிச் சலுகையை வழங்கி மீளப் பெற்றுக் கொள்வதற்கு வழிவகுத்துத் தரும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வட,கிழக்கு மக்களின் காணி உரிமையை உறுதி செய்ய புதிய சட்டமூலம் விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு
[ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015, 12:33.29 PM GMT ]
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களின் காணிகளை உறுதிசெய்யும் வகையில் ஆட்சி உரிமை விசேட ஒழுங்குகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.
இந்த சட்டமூலம் எதிர்வரும் வாரங்களில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
1993ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி முதல் 2009ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி வரையிலான காலப்பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் காணி உரிமையை உறுதி செய்யும் நோக்கில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்போவதாகவும்,  முன்னர் அந்த காணியிலிருந்தவர்களுக்கு அக்காணிகள் சொந்தமாகும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நடைமுறையிலுள்ள ஆட்சி உரிமை சட்டத்தின் பிரகாரம் 10 வருடங்களுக்கு குறையாமல் ஒரு காணியில் இருப்பவர்களுக்கே அக்காணி சொந்தம் என்ற சரத்தினால் வட, கிழக்கு மக்களுக்கு அநீதி ஏற்படும் நிலையுள்ளது எனவும் அதனை தவிர்ப்பதற்காகவே விசேட திருத்த சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத நல்லிணக்கத்திற்கான சர்வமத தலைவர்கள் வட,கிழக்கு மக்களின் காணி உரிமையை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர் எனவும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyESXSUkxyH.html

Geen opmerkingen:

Een reactie posten