தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 april 2015

வடக்கு மக்களின் குடிநீர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் கையாள வேண்டும்: ஜனாதிபதி

காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் புலிகளை சாடும் பரணகம
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 04:21.46 AM GMT ]
வட,கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் 60 சதவீதம் புலிகளின் நடவடிக்கைகள் காரணமாகவே காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம இந்திய ஊடகமொன்றிற்கு அண்மையில் வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இராணுவத்தினருக்கும் இடையில் கடந்த 30 வருடங்களாக யுத்தம் இடம்பெற்று வந்தது.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமல் போனோர்கள் விவகாரத்தில் 60 சதவீத பொறுப்பை தமிழீழ விடுதலை புலிகளே பொறுப்பேற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனோர் விவகாரத்தின் 30 சதவீதமான பொறுப்பை இலங்கை பாதுகாப்பு தரப்பினரும் ஏனைய 10 சதவீதத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தவிர்ந்த ஏனைய தமிழ் குழுக்களே பொறுப்பேற்க வேண்டும் என முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாட்சியமளித்துள்ளனர்.
எது எவ்வாறாகயிருப்பினும் மேற்கண்ட சதவீதமானது மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடுகிறது எனவும் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து காணாமல் போனோரில் 85 சதவீதமானோரும், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து காணாமல் போனோரில் 80 சதவீதமானோரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் காரணமாகவே காணாமல் போயுள்ளனர்.
எனினும் யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோரில் 50 சதவீதமானோர் பாதுகாப்பு தரப்பினரின் நடவடிக்கைகள் காரணமாகவும் ஏனைய 50 சதவீதமானோருக்கு புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகளுமே காரணமாகவுமே காணாமல் போயுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை அண்மையில் மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கப்பட்டது எனவும், இது தொடர்பில் அவ் அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது எனவும், ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

யாழ். கண்ணகையம்மன் ஆலய கிணற்றில் இருந்து ஷெல்கள் மீட்பு
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 04:31.29 AM GMT ]
யாழ்.தையிட்டி வறுத்தலை விளான் பகுதியில் உள்ள கண்ணகையம்மன் ஆலய கிணற்றில் இருந்து மூன்று ஷெல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ் மூன்று ஷெல்களுமே வெடிக்காத நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த இப்பகுதியில் மூன்று வாரங்களுக்கு முன்னரே மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக வலி வடக்கு பிரதேச சபையினால் குறித்த ஆலய கிணறு நேற்று துப்பரவு செய்யப்பட்ட போதே குறித்த மூன்று ஷெல் குண்டுகளும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஷெல்கள் குறித்து உடனடியாக கிராம அலுவலர் மூலம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் இராணுவத்தினரின் உதவியுடன் ஷெல்களை மீட்டுச்சென்றுள்ளனர்.


வடக்கு மக்களின் குடிநீர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் கையாள வேண்டும்: ஜனாதிபதி
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 05:03.59 AM GMT ]
வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைத் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுலா அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
குடிநீர் பிரச்சினை தொடர்பில் வட மாகாண ஆளுனர் மற்றும் முதலமைச்சருடன் உரிய முறையில் கலந்துரையாடி தீர்வு மேற்கொள்வதோடு இப்பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் கையாள வேண்டும் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை வடக்கில் சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்கும் மணல் அகழ்வுகள் குறித்தும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் கலந்துரையாடியுள்ளார்.
யாழ் வலிகாமம், பகுதியில் குடிநீரில் கழிவு ஒயில் கலந்திருப்பதாகவும், இதனை பருகும் பொது மக்களுக்கு சுகாதார கேடுகள் ஏற்படுவதாகவும் கடந்த காலங்களில் குற்றம் சுமத்தப்பட்டதுடன் பல ஆர்ப்பாட்டங்களும் மேற்கொள்ளப்பட்டமை குறிபிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten