சமூக மாற்றத்தில் பங்கெடுப்பவர்களாக பல்கலை மாணவர்கள் தங்கள் இயல்பை பேண வேண்டும்: வைத்திய கலாநிதி ஜெயராசா
[ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 11:28.33 AM GMT ]
கிளிநொச்சி அனைத்துப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கடந்த 12ம் திகதி வருடாந்த ஒன்று கூடல் அதன் தலைவர் ஜெ.குணாளன் தலைமையில் கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய வைத்திய கலாநிதி ஜெயராசா,
கிளிநொச்சி மாவட்டத்தின் பல்கலைக்கழ மாணவர் சமூகத்தின் தொகை இப்பொழுது அதிகம்.முன்னைய காலத்தில் இருந்த கல்வி சூழல் பெறுபேறுகளுக்கும் இன்று இருக்கின்ற சூழலுக்கும் வேறுபாடுகள் அதிகம்.
கல்வித்துறை வளர்ச்சி கண்டிருக்கின்றது.இன்னும் அதிக துறைகளுக்காக மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கின்றனர்.எத்தகைய கல்வி முறைமைகள் இருந்தாலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு என்றொரு சமூகப்பொறுப்பு எப்பொழுதுமே பேணப்பட்டு வந்திருக்கின்றது.
முன்னைய காலங்களில் பல்கலைக்கழக சமூகத்தில் இருந்துதான் சில சீரிய சிந்தனைகள் செயற்பாடுகளாக உருப்பெற்றன.அவை பின்பு சமூகத்தால் பல்வேறு மட்டங்களாலும் வளர்த்தெடுக்கப்பட்டன.
வல்லமையும் பற்றுதியும் பல்கலைக்கழக சமூகத்திடம் எப்பொழுதும் இருந்திருக்கின்றது.ஆகவே சமூகமாற்றத்தில் பங்கெடுக்கின்ற மாணவர் சமுதாயமாக பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் இயல்பை பேணுவருதல் வேண்டும் அதுவே எமது சமுதாயத்தின் வெற்றியாக அமையும் என்றார்.
இந்நிகழ்வில் கரைச்சி பிரதேசசபை உபதவிசாளர் நகுலேஸ்வரன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி மா.ஜெயராசா கரைச்சி பிரதேசசசபை உறுப்பினர் குமாரசிங்கம் கிளிநொச்சி கல்வி வலய வர்த்தகபாட ஆசிரிய ஆலோசகர் சிவரூபன் ஆகியோர் மற்றும் பெருமளவான பல்கலைக்கழக மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்
மைத்திரியின் ஆதரவாளர்கள் ஐ.தே.கவுடன் ஒன்றிணைவு
[ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 11:36.19 AM GMT ]
நடைபெறவுள்ள பொது தேர்தலின் போது வெற்றி பெறுவதற்காக ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதியின் ஆதரவாளர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் கீழான கூட்டணியும் ஒன்றிணைந்து செயற்படும் என அரச தகவல்கள் தெரிவித்துள்ளன.
தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்குள் பாரியளவில் உட்பூசல்கள் இடம்பெற்று வருகின்றன.
பல உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும் மறுத்து வருகின்றனர்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நியமிக்குமாறு பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது செயற்பட்டதை போன்று பொது தேர்தலிலும் செயற்படுவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதுடன்,
நாட்டில் தொடர்ந்தும் நல்லாட்சியை நிலைநாட்டுவதே இந்த ஒன்றிணைவின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyESZSUjoyD.html
Geen opmerkingen:
Een reactie posten