[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015, 11:54.57 AM GMT ]
கொழும்பு விவேகானந்தா மண்டபத்தில் நடைபெற்ற தந்தை செல்வா நற்பணி மன்ற நிகழ்வில் தலைமையுரை ஆற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
நல்லாட்சி, நீதிமன்ற சுதந்திரம், ஊடக சுதந்திரம், போலிஸ் காவல்துறை சுதந்திரம் ஆகிய பல விடயங்கள் நமது ஆட்சியின் மூலம் மீண்டும் இந்த நாட்டில் இப்போது கொண்டு வரப்பட்டுள்ளன.
இது போதாது. இந்த நல்ல விடயங்கள் நிரந்தரமாக வேண்டும் என்றால், அவை சட்டமாக்கப்பட வேண்டும்.
கடந்த ஆட்சியிலே நீதிமன்ற மற்றும் காவல்துறைகளில் தலையீடு, ஊடக அடக்குமுறை ஆகிய சர்வாதிகார அடிப்படைகள் 18ம் திருத்தத்தின் மூலம் சட்டமாக்கப்பட்டன.
ஆகவேதான் அவை சட்ட புத்தகத்தில் இருந்து அகற்றப்படும் முகமாக இப்போது 19ம் திருத்தம் வருகிறது. இதனால்தான் 19ம் திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்பதை நாம் உணரவேண்டும்.
18ம் திருத்தம் ஒரு பாவ காரியம். ஆகவே அன்று 18ம் திருத்தம் என்ற அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக கையை தூக்கிய அனைத்து எம்பிகளுக்கும் இன்று பாவமன்னிப்பு பெற அரிய ஒரு சந்தர்ப்பம் கிடைகின்றது.
அன்று 18க்கு ஆதரவாக கையை உயர்த்தியவர்கள், இன்று 18ம் திருத்தத்தை இல்லாது ஒழிக்கும் 19ம் திருத்தத்துக்கு ஆதரவாக ஒரு கையை மட்டுமல்ல, முடியுமானால், இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரவளித்து பாவமன்னிப்பு பெற வேண்டும்.
இதன்மூலம் மகிந்தவின் காட்டாட்சி அதிகாரப்பூர்வமாக அரசியலமைப்புரீதியாக முடிவுக்கு வரும் என்றார்.
தமிழினத்தின் அரசியல் பலத்தை இல்லாமல் செய்ய சூழ்ச்சி: பா.அரியநேத்திரன் பா.உ
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015, 05:04.14 PM GMT ]
படுவான்கரை பெருநிலத்தின் பனையறுப்பான் கயமுக விளையாட்டுக்கழகத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி மரணித்த இளைஞர்களின் நினைவுகூரல் முகமாக இடம்பெற்ற கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று பனையறுப்பான் வியாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியம் எம்.பி கலந்து கொண்டார். அங்கு அவர் உரையாற்றுகையில்,
தமிழ் இளைஞர்கள் தாயகப்பற்றுடன் வாழ வேண்டும் இந்த படுவான்கரை மண் கடந்த கால போராட்டத்தில் பல தியாகங்களை செய்த மண். குறிப்பாக எல்லை கிராமங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற பலர் முயற்சிக்கின்றனர். இதனை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது.
இவைகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரான நாம் தடுத்து வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். கடந்த காலத்தில் பல உயிர் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்கி மட்டக்களப்பில் துணிந்து முகம் கொடுத்தவர்கள் நாமே.
எமது அரசியல் பலத்தினால் தான் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசிய அரசியல் நிலைத்து நிற்கின்றது.
எமது அரசியல் பலத்தினால் தான் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசிய அரசியல் நிலைத்து நிற்கின்றது.
தற்போது எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டுயிட பலர் ஆர்வம் காட்டுகின்றனர். அன்று ஒளித்து பயத்தால் முன்வர தயங்கியவர்கள் புலம்பெயர்ந்து வாய் திறக்காமல் இருந்த சிலரும் இன்று தேர்தலில் போட்டியிட வாய்புக்களை உருவாக்கி கொடுத்தவர்கள் நாங்கள் தான் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவைகளை விட தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இல்லாமல் செய்ய இன்னும் பலர் முயல்கின்றனர். இதற்காக சில அரசியல் கட்சிகள் அரசிடமும் புலனாய்வாளர்களிடமும் பணத்தை பெற்று இம்முறை தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போட்டியிட ஆள்த்தேடுவதையும் காண முடிகிறது. இவ்வாறானவர்கள் தொடர்பாக எமது இளைஞர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். ஆட்சிமாற்றத்தை பயன்படுத்தி பலர் தமிழினத்தின் அரசியல் பலத்தை இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றார்கள் என்பதை புத்திஜீவிகளும் புரிய வேண்டும் எனவும் மேலும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyERbSUjw6E.html
Geen opmerkingen:
Een reactie posten