தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 21 april 2015

அகதிகளின் பிரச்சனைகளை தீர்க்க தயார்: சுவிஸ் அரசு அறிவிப்பு

அகதிகளின் பிரச்சனைகளை தீர்க்க ஐரோப்பிய நாடுகள் கொண்டுவரும் பொதுவான தீர்விற்கு சுவிஸ் அரசு அனைத்து வகையிலும் பங்கெடுக்கும் என சுவிஸ் சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களில் லிபியாவிலிருந்து இத்தாலிக்கு சட்டவிரோதமாக படகுகளில் வந்தபோது மத்திய தரைக்கடல் பகுதியில் விபத்து ஏற்பட்டு சுமார் 1000 அகதிகள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, நேற்று மாலை அகதிகள் பலியாவதை தடுக்கும் நோக்கில் ஐ.நா சபை அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியது.
இதுகுறித்து சுவிட்சர்லாந்தின் சட்ட அமைச்சரான Simonetta Sommaruga பேசுகையில், மரணப்பிடியில் சிக்கி தவிக்கும் அகதிகளை பாதுகாக்க சுவிஸ் அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.

அகதிகளின் பிரச்சனைகளை தீர்க்க எண்ணற்ற திட்டங்கள் இருக்கிறது. ஆனால், அதற்கான தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது கடினமாக உள்ளது.
ஏற்கனவே போராடிக்கொண்டிருக்கும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இதுபோன்ற தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது மிக கடினமாக உள்ளது.
கடந்த மார்ச் மாதம் சிரியாவை சேர்ந்த 3000 அகதிகளை அடுத்தடுத்த 3 வருடங்களில் சுவிஸ் நாட்டில் குடியேற அரசு ஒப்புதல் வழங்கியதுடன், அந்த திட்டத்திற்காக சுமார் 50 மில்லியன் பிராங்குகளும் ஒதுக்கியுள்ளது.
ஆனால், தாய்நாடுகளை விட்டு சிரியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அகதிகள் சட்டவிரோதமாக நுழைய முயற்சி செய்து வருகின்றனர் என பேசியுள்ளார்.
எனவே இதனை தடுக்க ஐரோப்பிய நாடுகள் முழு ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய ஐக்கிய நாடுகளின் பட்டியலில் சுவிஸ் அரசு இணையாததால், நேற்று Luxembourg நகரில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் Simonetta Sommaruga கலந்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten