தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 15 april 2015

இலங்கையில் போல யேமனிலும் தோல்வியடையும் பான் கீ மூன்

இலங்கையில் மக்களை காப்பாற்றாது வேடிக்கை பார்த்ததைப்போலவே யேமன் நாட்டிலும் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் தோல்வியடைந்து வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் நடந்த முப்பது ஆண்டுகாலப் போராட்டம் கடந்த 2009ம் ஆண்டு முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் இதனை உலகப்பொது மன்றமாகிய ஐக்கிய நாடுகள் சபை வேடிக்கை பார்த்ததாக அன்றைய காலகட்டங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனை பொதுச் செயலாளர் தானே வெளிப்படையாக ஒத்துக்கொண்டார். இலங்கை விடையத்தை ஐ.நா சரியாக கையாளத்தவறிவிட்டது என்றும்,யுத்தம் முடிந்த பின்னரும் கூட ஐக்கிய நாடுகள் சபையினால் இது சரியான திசையை நோக்கி செல்ல முடியவில்லை என்றும்,பாதிக்கப்பட்ட தரப்பிற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கவும் ஐ.நா தவறியது.
இந்த நிலையில் தற்போது யேமனில் நடந்து வரும் யுத்தத்தையும் பான் கீ மூன் சரியாக கையாளவில்லை என்று சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொது செயலாளரின் இதுபோன்ற அசமந்த போக்கினால் இலங்கையில் லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையிலேயே யேமனிலும் ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு பொது மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் தவறிழைத்து வருவதானது ஐக்கிய நடுகள் சபையின் இருப்பின் மீதான சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதாக அரசியல் அவதானிகளும் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

Geen opmerkingen:

Een reactie posten