திருநெல்வேலி பாளை மார்க்கெட் திடலில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னதாக நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
பேட்டியில் அவர் கூறுகையில், நமது நாட்டில் தயாராகும் வெற்றிலையில் பூச்சி மருந்து உள்ளது என ஐரோப்பிய நாடுகள் அங்கு விற்பனைக்கு தடை செய்துள்ளது.
அதே நேரத்தில் 30 சதவீத நச்சுத்தன்மை உடைய வெளிநாட்டு தயாரிப்பான குளிர்பானங்கள் நமது நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பவானிசிங் நியமனம் செல்லாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதே என்ற கேள்விக்கு, நான் எளிய மகன். பெரிய பிரச்சனையில் தலையிட முடியாது. ஆனால் இந்த வழக்கில் ஜெயலலிதா விடுதலையானால் மகிழ்ச்சி அடைவேன் என்று பதிலளித்துள்ளார்.
மேகதாது அணை பிரச்சனையில் விஜயகாந்த் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து பிரதமரை சந்தித்துள்ளாரே என்ற கேள்விக்கு, விஜயகாந்தை எதிர்க்கட்சி தலைவர் என்று ஏற்க முடியாது.
பத்திரிகையாளரின் ஒரு கேள்வியை எதிர்கொள்ள முடியாதவர் எப்படி எதிர்க்கட்சி தலைவராக முடியும்.
20 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்த எதிர்கட்சி தலைவர் ஏன் அனைத்து கட்சியினருடன் பிரதமரை சந்திக்கவில்லை.
மேலும், அவர்கள் தமிழன் வாழ வேண்டும் என்று நினைக்கவில்லை என்ரும் தமிழனை ஆள வேண்டும் என நினைக்கிறார்கள எனவும் தெரிவித்துள்ளார்.
கங்கைகொண்டான் சிப்காட்டில் செயல்பட்டு வரும் தனியார் குளிர்பான நிறுவனத்திற்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்கக்கூடாது, அந்நிறுவனத்தை மூட வேண்டும், என்பதை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
http://www.newindianews.com/view.php?224MM303lOI4e2DmKcb240Wdd204Abc3mDhe43OlH023gAo3
|
Geen opmerkingen:
Een reactie posten