[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 01:26.50 AM GMT ]
தேர்தல் வாக்களிப்புக்கள் முடிவடைந்த நிலையில் இரவுவேளையில் அமெரிக்க ராஜங்க செயலாளர் ஜோன் கெரி, மஹிந்தவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டார்.
இதன்போது தேர்தலில் தோல்வியடைந்தால் அதிகாரத்தை அமைதியாக கையளிப்பது குறித்து கெரி வினவினார்.
இதன்போது பதில் வழங்கிய மஹிந்த ராஜபக்ச, தேர்தல் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. தாம் வெற்றியில் நம்பிக்கையாக இருக்கிறேன் எனவே வெற்றியின் பின்னர் உங்களுடன் தொடர்புகொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அத்துடன் அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இலங்கைக்கு வருமாறு ஜோன் கெரிக்கு விடுத்த அழைப்பையும் மஹிந்த ராஜபக்ச நினைவூட்டியுள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடல் முடிந்தவுடன் அலரி மாளிகையில் தமக்கு அருகில் இருந்தோரிடம் ஜோன் கெரி நல்லவர் என்றும் சர்வதேச சமூகத்துடன் பணியாற்றுவதற்கு அவர் உதவுவார் என்று மஹிந்த தெரிவித்துள்ளார்.
தோல்வி அறிவிக்கப்படும் வரை அவர் எதிர்கால திட்டங்களுடன் மகிழ்ச்சியான மனநிலையிலேயே இருந்ததாக இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு வரவுள்ள நிலையிலேயே இந்த செய்தியை இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
ஒத்துழைப்பு வழங்கிய சகல தரப்பினருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு
[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 01:41.46 AM GMT ]
விசேட ஊடக அறிக்கையொன்றின் மூலம் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 37 வருடங்களுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.
ஆரம்பம் முதல் இந்தப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய மகா சங்கத்தினர் தலைமையில் செயற்பட்ட சகல சமயத் தலைவர்கள், சமூக அமைப்புக்கள், ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் என்பவற்றுக்கும் நன்றிகள் எனவும் அதில் ஜனாதிபதி கூறியுள்ளார்.
கடந்த ஐந்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டும், அதனை நடைமுறைப்படுத்த இந்த சந்தர்ப்பத்திலேயே முடிந்துள்ளது.
இந்த வெற்றி இன்றுள்ளவர்களை விட பிறக்கப் போகும் பிள்ளைகளுக்கு தான் பயனுள்ளதாக இருக்கும் எனவும் ஜனாதிபதி அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா விசாரணை அறிக்கையில் ஆச்சரியங்கள் இருக்கும்?: எரிக் சொல்ஹெய்மிடம் ஹுசைன் தெரிவிப்பு
[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 03:16.28 AM GMT ]
அவ்வாறு வெளியிடப்படும் அறிக்கையானது ஆச்சரியம் மிக்கதாக அமையுமென ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தெரிவித்ததாக, இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், குறித்த பதிவில் வேறு விபரங்கள் எதையும் எரிக் சொல்ஹெய்ம் வெளியிடவில்லை.
http://www.tamilwin.com/show-RUmtyERdSUjx5A.html
Geen opmerkingen:
Een reactie posten