தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 april 2015

புலம்பெயர்ந்தோர் தடைநீக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன!- இலங்கை அரசாங்கம்

"19வது சட்டத்திருத்தம் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை"
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 05:58.02 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கை ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இரண்டு பதவிக்காலங்கள் என்று மீண்டும் குறைத்தது, மற்றும் தகவல் அறியும் உரிமை என்ற இரு விஷயங்களைத் தவிர, 19வது சட்டத்திருத்தத்தின் மூலம் மைத்திரிபால சிறிசேன பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்கிறார் சட்ட ஆய்வாளர் குமாரவடிவேல் குருபரன்.
இன்று இலங்கையில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மையுடன் நிறைவேறிய இந்த சட்டத்திருத்தத்தின் மூலம், பொது ஸ்தாபனங்களுக்கு அரசியல் தலையீடு இல்லாமல் நியமனங்களைச் செய்ய உருவாக்கப்பட்ட அரசியல் சட்ட அவையில் பெரும்பான்மையாக அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் இருக்கவேண்டும் என்ற யோசனையைக் கைவிட்டு, இப்போது அந்த அவையில் பத்தில் ஏழு பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பார்கள் என்ற முடிவுக்கு வர அரசு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது என்றார் குருபரன்.
இந்த நிர்ப்பந்தம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களால் தரப்பட்டு அதற்கு ரனில் விக்ரமசிங்க அரசு பணிந்திருக்கிறது என்றார் அவர்.
ரனில் விக்ரமசிங்க இதற்கு பணிந்திருப்பதற்குக் காரணம் , அது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த 19வது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியதாகக் காட்ட வேண்டும் என்ற ஆர்வம்தான் என்றும் அவர் கூறினார்.


புலம்பெயர்ந்தோர் தடைநீக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன!- இலங்கை அரசாங்கம்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 04:11.01 PM GMT ]
புலம்பெயர்ந்த தமிழர்களின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இதனை இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்தவர்கள் மீதான தடை கடந்த 2014 மார்ச் மாதம் கொண்டு வரப்பட்டது.
எனினும் இதில் நாட்டுக்கு எதிராக செயற்படாதவர்களும் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்தே புதிய அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் தடை நீக்கம் குறித்து அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் முழுமை அரசியலை பயன்படுத்தி இலங்கைக்கு சமாதானத்தை கொண்டு வரப்போவதாக அவர் இன்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் முன்னைய அரசாங்கம், கடந்த பல ஆண்டுகளால் சர்வதேசத்துடன் முரண்பாட்டை கொண்டிருந்தது.
எனினும் கடந்த 108 நாட்களுக்குள் புதிய அரசாங்கம் இந்தநிலையை மாற்றியமைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyERcSUjx2J.html


Geen opmerkingen:

Een reactie posten