ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்கு தரைவழியாக சென்ற 14 அகதிகள் ரயில் மோதி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடல் மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் கோரி செல்வதில் பெரும் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியாவை சேர்ந்த சுமார் 50 அகதிகள் தரைவழியாக நேற்று நள்ளிரவு புறப்பட்டனர்.
Macedonian நாட்டில் உள்ள Veles நகர ரயில் தண்டவாளம் வழியாக அகதிகள் கும்பலாக சென்றுள்ளனர்
அப்போது தெற்கு மெஸிடோனியாவிலிருந்து Gevgelija நகருக்கு, சர்வதே ரயில் ஒன்று அதிவேகத்தில் வந்துள்ளது.
ஆனால் ரயில் வருவதை அறியாத அகதிகள் குழு அங்குள்ள சந்திப்பு பகுதியை(Level Crossing) கடக்க முயன்றனர்.
இந்நிலையில் தண்டவாளத்தில் நபர்கள் கடப்பதை அறிந்த ரயில் ஓட்டுனர், ’சைரன்’(Siren)ஒலியை எழுப்பி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை கேட்ட சிலர், அலறி அடித்துக்கொண்டு சிதறி ஓடியுள்ளனர்.
எனினும் அதே வேகமாக வந்த ரயில் 14 பேர் மீது மோதிச்சென்றதில், அவர்கள் அதே இடத்தில் பலியாகினர்.
இந்த சம்பவத்தை அறிந்து வந்த Veles மீட்பு குழுவினர், தண்டவாளத்தில் இறந்து கிடந்த நபர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தில் இறந்த 14 பேர்களை தவிர வேறு யாருக்கும் காயம் ஆகவில்லை என மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிறு அன்று லிபியாவிலிருந்து இத்தாலிக்கு கடல்வழியாக படகுகளில் வந்த சுமார் 1,000 அகதிகள் விபத்தில் இறந்துள்ள நேரத்தில், தரை மார்க்கமாக ஐரோப்பா நோக்கி புறப்பட்ட 14 அகதிகள் ரயில் மோதி இறந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
http://newsonews.com/view.php?224MM303lO44e2BnBcb280Mdd208Ybc3nBfe43Oln023gAy3
|
Geen opmerkingen:
Een reactie posten