தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 14 april 2015

இலங்கையின் போர்க்குற்ற விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்!- எட்வேட் மிலிபான்ட்

பிரிவினைவாதம் இல்லா நாட்டை கட்டியெழுப்புவோம்: மகிந்த வாழ்த்துரை
[ செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2015, 04:58.45 AM GMT ]
நாட்டிலுள்ள அனைத்து பிரிவினைவாதத்தையும் ஒழித்து  நாட்டை கட்டியெழுப்புவோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
சகல பிரிவினைவாதத்தையும் ஒழித்து இம்முறை நாட்டில் அனைத்து மக்களும் தங்கள் குடும்பங்களுடன் இணைந்து புதுவருடத்தை கொண்டாடுவீர்கள் என நான் நம்புகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமய சம்பிரதாயங்களில் ஒன்றிணைந்து நிறைவேற்றவும் என அவர் மேலும் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


கிழக்கு பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கு அதிபர்களின் முகாமைத்துவமே காரணம்: சீ.தண்டாயுதபாணி
[ செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2015, 05:35.23 AM GMT ]
உயர்ந்த மட்டத்தில் பெறுபேறுகளை பெறும் பாடசாலைகளாக நகர்ப்புறங்களை அண்டிய பாடசாலைகளே அதிகளவான பெறுபேறுகளை பெற்றிருக்கின்றன, அங்குதான் அனைத்து வளங்களும் நிறைந்து காணப்படுகின்றன என கிழக்கு மாகாண கல்வி, போக்குவரத்து அமைச்சர் சீ.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
கல்முனை சம்மாந்துறை மல்வத்தை சீர்பாததேவி வித்தியாலய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அனைத்து வளங்களும் ஒரு பாடசாலைக்கு இருக்கும்போது இந்தப் பாடசாலையின் பெறுபேறுகள் அதிஉச்ச நிலையை அடையும். இங்குதான் பெறுபேறுகளுக்கும் வளங்களுக்குமிடையே தொடர்பு இருப்பதனை காணமுடியும்.
கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் தமிழ், முஸ்லிம், சிங்களப்பாடசாலைகள் என 17 கல்வி வலயங்களை உள்ளடக்கியதாக 1100 பாடசாலைகள் உள்ளன.
அதிகமான பாடசாலைகள் பின்தங்கிய பிரதேசங்களிலே காணப்படுகின்றன எனவும், சகல பாடசாலைகளையும் எடுத்து நோக்கினால் அனைத்து வளங்களும் இல்லாமல் இருந்தாலும் கல்வியின் பெறுபேறுகள் உச்சநிலையை காட்டும் இதற்கான காரணம் அந்தப் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்களினது அயராத முயற்சியே எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
மேலும் இந்த பாடசாலையின் அதிபரின் சிறந்த முகாமைத்துவமே இதற்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாடசாலை அதிபர் திருமதி ரஜனி சிறியானந்தமூர்த்தி தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண கல்வி, போக்குவரத்து அமைச்சர் சீ.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் நஜீம், பிரதிக்கல்வி, கோட்டக்கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆலய தர்மகர்த்தாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyESYSUkx0J.html


இலங்கையின் போர்க்குற்ற விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்!- எட்வேட் மிலிபான்ட்
[ செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2015, 05:40.39 AM GMT ]
இலங்கையில் இடம்பெற்ற மனித நேயத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்தின் நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று தொழிற்கட்சியின் தலைவர் எட்வேட் மிலிபான்ட் கோரியுள்ளார்.
தமிழ் புதுவருடத்துக்காக வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
இலங்கையில் நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணைகள் உட்பட்ட நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் பொதுவாழ்க்கைக்கு ஒத்துழைப்பை வழங்குகின்ற தமிழர்களுக்கு இந்த வேளையில் வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்வதாகவும் மிலிபான்ட் தெரிவித்துள்ளார்.
தொழிற்கட்சி எப்போதும் தமிழ் சமூகத்துடன் நட்புடன் இருந்து வருகிறது. அது தொடரும் என்றும் மிலிபான்ட் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyESYSUkx1A.html

Geen opmerkingen:

Een reactie posten