தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 14 april 2015

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு உறுத்திப்படுத்தப்பட வேண்டும்: ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்

65 வருடங்களாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு புது வருடத்தில் தீர்வு காணப்பட வேண்டும்: பொன்.செல்வராசா
[ செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2015, 11:55.57 AM GMT ]
கடந்த கால கஸ்டங்கள் நீங்கி எதிர்வரும் காலத்தில் தமிழ் மக்கள் சகல உரிமைகளும் பெற்று சிறப்புற்றுவாழ இந்த சித்திரைப் புத்தாண்டு வழிசமைக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்துள்ளார்.
 
அவர் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,
65 ஆண்டு காலமாக தமிழரின் அபிலாசைகள் தீர்க்கப்படவில்லை என்ற காரணத்தினால் தமிழர்கள் சித்திரைப் புத்தாண்டை மன சந்தோசத்துடனும் சமாதானத்துடனம் காலாகாலாமாக கொண்டாடுவதில் சங்கடங்களை எதிர்நோக்கி இருந்தார்கள்.
ஆனால் 2015ம் ஆண்டு மன்மத வருட புத்தாண்டு களைகட்டியுள்ளதை காணமுடிகிறது.
வருகின்ற காலத்தில் தமிழர்கள் தங்களது அபிலாசைகளை வென்றெடுக்கின்ற புத்தாண்டாக இது மாற வேண்டும்.
அத்துடன் 65 வருடங்களாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு இந்த புதுவருடத்தில் ஒரு தீர்க்கமான முடிவு காணப்படவேண்டுமெனக் கூறிக் கொள்கிறேன் என்றார்.


நான் எதிர்க்கட்சி தலைவராவதற்கு எவ்வித தடையும் இல்லை: நிமல் சிறிபால டி சில்வா
[ செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2015, 12:21.51 PM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அமைச்சர் பதவி பெற்றுக்கொள்வதனால் தனக்கு எதிர்க்கட்சி தலைவராக செயற்படுவதற்கு எவ்வித தடையும் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அவர் இவ்வாறான ஒரு கருத்தை அறிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தில் அமைச்சர் பதவி பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் தான் எதிர்க்கட்சி தலைவராக நான் நியமிக்கப்பட்டேன்.
இதனால் தான் எதிர்க்கட்சி தலைவராக செயற்படுவதற்கு எவ்வித தடையும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு உறுத்திப்படுத்தப்பட வேண்டும்: ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்
[ செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2015, 12:43.23 PM GMT ]
யாழ்ப்பாணத்தில் கடந்த 7ம் திகதி மூன்று ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கும் கொலை முயற்சிக்கும் உள்ளாக்கப்பட்டமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதம் வருமாறு,
கௌரவ.மைதிரிபால சிறிசேன,
அதிமேதகு ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே!
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்
ஜனவரி எட்டாம் திகதிக்குப் பின்னர் இந்த நாட்டில் தங்களின் தலைமைத்துவத்தின் கீழ் ஓர் நல்லாட்சி நடைபெறும் என்ற அசையாத நம்பிக்கையின் அடிப்படையில்தான் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் தங்களுக்கு அமோக ஆதரவை தேர்தலில் வழங்கினர்.
தங்களின் ஆட்சியின் கீழ் இந்த நாட்டின் மனித உரிமைகள் கட்டியெழுப்படுவதற்கான நல்ல முன்னேற்றங்கள் ஏற்படுமென என தமிழ் மக்கள் நம்பியிருந்தார்கள்.
ஆனால் நீங்கள் பதவி ஏற்றபின்பும் இந்த நாட்டில் தமிழ் மக்கள்மீதும் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதும் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்ற துரதிஸ்டவசமான செய்திகள் வெளிவருது தங்கள் நல்லாட்சி என்ற இலக்கு மீது கறைபடிவதாகவே எண்ணத்தோன்றுகின்றது.
அதிலும் வேலியே பயிரை மேய்கின்ற கதையாய் பாதுகாப்பு தரப்பு பொலிஸ் தரப்பு போன்றவைகள் மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது எந்தவிதத்தில் நியாயம்.
கடந்த 2015.04.07ம் திகதி யாழ்ப்பாணம் நல்லூரில் தூயகுடிநீருக்கான கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் அங்கே வடக்கு மாகாண முதலமைச்சர் போராட்டக்காரர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டமை தொடர்பிலான செய்திகளை சேகரிக்கச்சென்று திரும்பிக் கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் த.வினோஜித் (தலைவர் யாழ்.ஊடக மையம்), த.பிரதீபன் (கிரு தொலைக்காட்சி செய்தியாளர்), ஸ்ரீ.மயூரதன் (சுயாதீன ஊடகவியலாளர்) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் தொடர்ந்த சிவில் உடை தரித்த பொலிசார் அச்சுறுத்தியுள்ளதுடன் ஊடகவிலாளர்களை இராணுத்தேவைக்கு பயன்படுத்தும் கத்தியால் குத்துவதற்கும் முனைந்துள்ளனர்.
இந்த அச்சுறுத்தலையடுத்து யாழ் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த ஊடவியலாளர்கள் அங்கு பொலிஸ் நிலையம் முன்பாக ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய சிவில் உடைதரித்த நபர்கள் கத்தியை சீருடை தரித்த பொலிசாரிடம் கொடுத்துள்ளதை உறுதிப்படுத்துகின்றனர்.
இந்தச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதை விடுத்து பொலிஸ் உயர் அதிகாரிகள் ஊடகவலாளர்களை சமாதனமாக போகும்படியும் கேட்டுள்ளனர்.
மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே!
கண்ணுக்கு முன்னேயே குற்றங்கள் அரங்கேறுகின்றன. அதை மக்களை காக்க வேண்டிய பொலிசாரோ அல்லது பொலிசாரின் அனுசரணையிலோ செய்கின்றனர்.
இதன் காரணமாக மீண்டும் தமிழ்பேசும் மக்களின் பிரதேசங்களில் அச்சமும் நம்பிக்கையின்மையும் உருவாகிவருகின்றது.
இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பான கறுத்தப்புள்ளியை மேலும் வலுப்படுத்துவதாகவே இத்தகைய சம்பவங்கள் அமைகின்றன.
ஊடக சுதந்திரம் தொடர்பாக தொடர்ந்தும் இலங்கை சர்வதேசத்தில் பின்தங்கிய நிலைக்குச் செல்வதையே இந்தச்சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
கடந்த 2015.04.07ம் திகதி மூன்று ஊடகவியலாளர்கள் மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் எமது மிகுந்த மனவருத்தத்தை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.
இந்த அச்சுறுத்தல் சம்பவத்தோடு தொடர்புடைய குற்றவாளிகள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும். இப்படியான சம்பவங்கள் இனியும் நடைபெறாதவாறு தாங்கள் உறுதிதர வேண்டும் என தங்களை பணிவுடன் வேண்டிக் கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyESYSUkx3B.html

Geen opmerkingen:

Een reactie posten